தனுஷின் D40 படத்தின் மாசான டைட்டில் பாலிவுட்டில் வெளியானது
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Jan 07, 2020 02:50 PM
தனுஷ் தற்போது மாரி செல்வராஜின் இயக்கத்தில் ‘கர்ணன்’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்பாக இவர் பட்டாஸ், டி40 என்று அழைக்கப்படும் கார்த்திக் சுப்புராஜின் படம் ஆகியவற்றில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று வெளியான பட்டாஸ் திரைப்படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மெஹ்ரீன் பிர்ஸடா, சினேகா, நவீன் சந்திரா, நாசர், முனீஸ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த திரைப்படம் வரும் ஜனவரி 16 ரிலீசாக உள்ளது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்த தயாரிக்கும் இந்த படத்துக்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, விவேக் - மெர்வின் கூட்டணி இசையமைக்கிறது.
இந்நிலையில் தனுஷ் 40 படத்தின் பெயர் என்ன என்று நிலவி வந்த குழப்பத்துக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. தனுஷின் டி40 திரைப்படத்தை ஒய் நாட் ஸ்டுடியோசும், ரிலயன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்நிலையில் ரிலயன்ஸ் நிறுவனம் தாங்கள் 2020ம் ஆண்டு தயாரிக்கும் படங்களின் பட்டியலை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளது. இதில் தனுஷின் திரைப்படம் சுருளி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.