darbar USA others

'அசுரன்' தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் கூட சேர்ந்தா.... - 'வெறித்தனம்' பிரபலம் சொன்ன அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள D40 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. இந்த படத்தை ஒய்நாட் ஸ்டுடியோஸ் சார்பாக சசிகாந்த் தயாரித்துள்ளார்.

Lyricist Vivek tweets about Santhosh Narayanan, Karthik Subbaraj, Dhanush in D40

இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்க, கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜூ ஜார்ஜ், அஸ்வந்த்  உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் பாடலாசிரியர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் D40 படம் குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில், ''எல்லாமே இங்கிருந்து தான் தொடங்கியது. அவர் என்னுடைய வாழ்வில் சேர்த்த மகிழ்ச்சி அளவிடமுடியாதது. மேலும் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் 'அசுரன்' தனுஷுடன் இணையும் போது புதுமையான படைப்புகளை உருவாக்குவதற்கான தளமாக இருக்கும். ஸ்பெஷலான 4 வது பாடலின் போது.. - என்று இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Entertainment sub editor