தனுஷை இயக்கும் சூப்பர் ஹிட் இயக்குநர்– 'அசுர' வேகத்தில் தொடங்கிய ஷூட்
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Jan 03, 2020 11:26 AM
’அசுரன்’, ’எனை நோக்கி பாயும் தோட்டா’ படங்களைத் தொடர்ந்து தனுஷ் துரை செல்வராஜ் இயக்கிய ’பட்டாஸ்’ திரைப்படத்தில் நடித்து வந்தார். இப்படத்தில் அவருடன் மெஹ்ரீன் கவுர் பிர்சாதா, ஸ்னேகா ஆகியோர் நடித்துள்ளனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்தை அடுத்து விரைவில் டீசர் வெளியாக உள்ளது.

இதைத் தொடர்ந்து தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் டி40 என்ற பெயர் சூட்டப்படாத படத்தில் நடித்து வந்தார். கேங்ஸ்டர் கதைக்களம் கொண்ட இந்த படத்தில் தனுஷுடன் ஐஷ்வர்யா லக்ஷ்மி, ’கேம் ஆஃப் துரோன்ஸ்’ சீரிஸ் பிரபலம் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் நடித்து வந்தனர். இந்த திரைப்படத்தின் ஷூட் சமீபத்தில் முடிவடைந்தது.
இதைத் தொடர்ந்து தனுஷின் அடுத்த படத்தை மாரி செல்வராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த படத்தின் ஷூட் நேற்று திருநெல்வேலியில் தொடங்கி உள்ளது. தொடர்ந்து அங்கு பல்வேறு இடங்களில் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது. மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானது குறிப்பிடத் தக்கது.