தனுஷ் வெடிக்கும் 'பட்டாஸ்' பட மரண மாஸ் டிரெய்லர் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jan 07, 2020 11:29 AM
தனுஷ் நடிப்பில் வருகிற பொங்கலை முன்னிட்டு ஜனவரி 16 ஆம் தேதி வெளியாகவுள்ள படம் 'பட்டாஸ்'. இந்த படத்தை 'எதிர் நீச்சல்' , 'கொடி' படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் மெஹ்ரீன் பிர்ஸடா, சினேகா, நவீன் சந்திரா, நாசர், முனீஸ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, விவேக் - மெர்வின் கூட்டணி இந்த படத்துக்கு இசையமைத்துள்ளனர்.
இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. டிரெய்லரில் தனுஷ், இரண்டு விதமான கெட்டப்களில் காட்சியளிக்கிறார். டிரெய்லர் ஆக்சன், செண்டிமென்ட், காமெடி ஒரு கமர்ஷியல் பேக்கேஜாக இருந்தது.
தனுஷ் வெடிக்கும் 'பட்டாஸ்' பட மரண மாஸ் டிரெய்லர் இதோ வீடியோ
Tags : Pattas, Dhanush, Durai senthilkumar, Vivek Mervin