யாரெல்லாம் பார்க்கலாம் தல அஜித்தின் நேர்கொண்ட பார்வையை - Censor விவரம் உள்ளே

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Thala Ajith's Nerkonda Paarvai censored with UA, worldwide release on August 8

மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை ‘தீரன் அதிகாரம் ஒன்று’ இயக்குநர் ஹெச்.வினோத் இயக்குகிறார்.  ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்க்’ திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் அஜித்துடன் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சுஜித், அஸ்வின் ராவ்,டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் டிரைலர், பாடல்கள் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றதுடன், படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

தற்போது சென்சாருக்கு அனுப்பப்பட்ட இப்படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நேர்கொண்ட பார்வைக்கு ‘யு/ஏ’ கிடைத்துள்ளது. பிரபஞ்சத்திற்கே பிடிக்கும் விதமான படம்’ என ட்வீட் செய்துள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட்.8ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகிறது.