www.garudabazaar.com

BIGGBOSS கவின் - பீஸ்ட் அபர்ணா தாஸ் நடிக்கும் புதிய படம்.. BTS போட்டோவுடன் வெளிவந்த சூப்பர் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கவின் - அபர்ணா தாஸ் நடிப்பில்,  “டாடா” படத்தின் BTS போட்டோவுடன் படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது .

Biggboss Kavin Aparna Das Dada Shooting Wrapped

Olympia Movies சார்பில் தயாரிப்பாளர் S.அம்பேத் குமார்,  தயாரிப்பில் 'டாடா' படத்தினை அறிமுக இயக்குநர் கணேஷ் K பாபு இயக்குகிறார், இப்படத்தில் கவின் மற்றும் அபர்ணா தாஸ் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஒரு அழகான காதல் திரைப்படமாக உருவாகும் இப்படம் பார்வையாளர்களுக்கு நிறைய பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும். நடிகர் கவினுக்கென ஒரு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் இருப்பதால், அவரது ரசிகர்களிடம் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தின் அனைத்துப் படப்பிடிப்பும் தற்போது முடிவடைந்தது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முழுப்படப்பிடிப்பும்  சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

Biggboss Kavin Aparna Das Dada Shooting Wrapped

கவின் மற்றும் அபர்ணா தாஸ் முதன்மை வேடங்களில் நடிக்கும் நிலையில், K.பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களது பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘ராசுக்குட்டி’  படம் வெளியானதிலிருந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்படத்தில் திரையில் ஒன்றாகத் தோன்றுகிறார்கள். மேலும்  ‘முதல் நீ முடிவும் நீ’ புகழ் ஹரிஷ், வாழ் புகழ் பிரதீப் ஆண்டனி மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர்.

 

தொழில்நுட்பக் குழுவில் எழில் அரசு K (ஒளிப்பதிவு), ஜென் மார்ட்டின் (இசை), கதிரேஷ் அழகேசன் (எடிட்டிங்), சண்முக ராஜ் (கலை), மற்றும் சுகிர்தா பாலன் (ஆடை வடிவமைப்பு), APV மாறன் (நிர்வாகத் தயாரிப்பாளர்), அருணாச்சலம் சிவலிங்கம் (ஒலி வடிவமைப்பு) ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

 

தொடர்புடைய இணைப்புகள்

Biggboss Kavin Aparna Das Dada Shooting Wrapped

People looking for online information on Aparna Das, Dada, Kavin will find this news story useful.