www.garudabazaar.com

பிரபல டிவி சேனலின் புதிய சீரியல்.. ராதிகாவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் SA சந்திரசேகர்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் & ராதிகா சரத்குமார் நடிக்கும் புதிய மெகாதொடர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Radhika SarathKumar New Serial Kizhaku Vaasal in Vijay TV

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பிரபல இயக்குனராக விஜய்யின் பல திரைப்படங்களை தொடக்க காலத்தில் இயக்கியவர். விஜய்யை வைத்து படம் இயக்கும் முன்பே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் சில படங்களை இயக்கியுள்ளார்.

மேலும் தமிழ் அல்லாது தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியுள்ளார், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்.

இவரது மனைவி ஷோபா சந்திரசேகர், பின்னணி பாடகியாக, நடிகர் விஜய்யுடன் இணைந்து பாடிய பாடல்கள் உட்பட பல பாடல்களை பாடியுள்ளார். தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்தவர்.

கடைசியாக 'மாநாடு' படத்தில் சிம்புவுடன் 'அறிவழகன்' எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் 'நான் கடவுள் இல்லை' என்ற படத்தை சந்திர சேகர் இயக்கி இருந்தார். இந்த படம் கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இயக்குனர் சந்திரசேகர் & ராதிகா சரத்குமார் நடிக்கும் புதிய தொடர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு வாசல் என்ற இந்த தொடரில் எஸ்.ஏ. சந்திரசேகர் & ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராதிகா சரத்குமார் பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Radhika SarathKumar New Serial Kizhaku Vaasal in Vijay TV

People looking for online information on Radhika Sarathkumar, S.A.Chandra Sekhar will find this news story useful.