www.garudabazaar.com

சரத்குமார் & ராதிகா சரத்குமாரின் அறுபதாம் கல்யாணம்.. மகள் பகிர்ந்த THROWBACK வைரல் ஃபோட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ராதிகா சரத்குமார் & நடிகர் சரத்குமாரின், 60ஆம் கல்யாண புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

SarathKumar Radhika SarathKumar Shashti Poorti Ugraratha Santi wedding photos

Images are subject to © copyright to their respective owners.

Also Read | அஜித் பட தயாரிப்பாளருடன் 'அல்போன்ஸ் புத்திரன்.. அடுத்த படம் குறித்து வெளியான அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் முன்னணி பிரபல நடிகராக வலம் வருபவர் சரத்குமார். இவர் நடித்த சூர்யவம்சம், நாட்டாமை, நட்புக்காக உள்ளிட்ட படங்கள் எவர்க்ரீன் க்ளாசிக் படங்களாக கொண்டாடப்படுகின்றன

அண்மையில் இவர் வானம் கொட்டட்டும், பொன்னியின் செல்வன், வாரிசு ஆகிய படங்களில்  நடித்தார். பொன்னியின் செல்வன் படத்தில் சரத்குமார், பெரிய பழுவேட்டரையராக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

SarathKumar Radhika SarathKumar Shashti Poorti Ugraratha Santi wedding photos

Images are subject to © copyright to their respective owners.

தற்போது தி ஸ்மைல் மேன், பரம்பொருள் & நிறங்கள் மூன்று ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவராகவும், பொறுப்புகளைக் கொண்டிருக்கும் சரத்குமார் நடிகர் சங்கத்தில் முக்கிய பங்காற்றி இருக்கிறார். மேலும் தென்காசி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.

SarathKumar Radhika SarathKumar Shashti Poorti Ugraratha Santi wedding photos

Images are subject to © copyright to their respective owners.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ராதிகா சரத்குமாரை நடிகர் சரத்குமார் திருமணம் செய்து கொண்டார். ராதிகா சரத்குமார், சமீபத்தில் ரன் பேபி ரன் படத்தில் நடித்திருந்தார். தற்போது சந்திரமுகி 2 மற்றும் மெர்ரி கிறிஸ்துமஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சின்னத்திரை தொடர்களிலும் ராதிகா சரத்குமார் நடித்துள்ளார்.

SarathKumar Radhika SarathKumar Shashti Poorti Ugraratha Santi wedding photos

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில், சரத்குமாரின் 60-வது பிறந்தநாள் நிகழ்வில் நடந்த ராதிகா & சரத்குமாரின் அறுபதாம் கல்யாண Throwback புகைப்படங்களை மகள் ராயனி ஹார்டி  வெளியிட்டுள்ளார். 

SarathKumar Radhika SarathKumar Shashti Poorti Ugraratha Santi wedding photos

Images are subject to © copyright to their respective owners.

இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. 8 வருடங்களுக்கு முன் ராதிகா & சரத்குமாரின் அறுபதாம் கல்யாணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | சமந்தா - விஜய் தேவரகொண்டா நடிக்கும் PAN INDIA படம் 'குஷி'.. ரிலீஸ் எப்போ? செம அப்டேட்

தொடர்புடைய இணைப்புகள்

SarathKumar Radhika SarathKumar Shashti Poorti Ugraratha Santi wedding photos

People looking for online information on Radhika Sarathkumar, Sarath Kumar will find this news story useful.