டைரக்ட் செய்த முதல் குறும்படத்துக்கே சர்வதேச விருது! கபாலி நடிகை மகிழ்ச்சி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகை ராதிகா ஆப்தே இயக்கிய குறும்படம் ‘தி ஸ்லீப்வாக்கர்ஸ்’. இந்த ஷார்ட் ஃப்லிம்மில் சஹானா கோஸ்வாமி, குல்ஷன் தேவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ராதிகா ஆப்தேவின் கணவர் பெனிடிக்ட் டெய்லர் இதற்கு இசையமைத்துள்ளார். கதை தூக்கத்தில் நடப்பதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

Radhika Aptes directorial debut'The Sleepwalkers' wins award

அந்தக் குறும்படத்துக்கு பாம் ஸ்பிரிங்ஸ் சர்வதேச குறும்பட விழாவில் அண்மையில் நாமினேட் ஆகியிருந்தது. இது குறித்து அவர் ஏற்கனவே பகிர்ந்திருந்தார். தற்போது அவரது குறும்படம் பாம் ஸ்பிரிங்ஸ் சர்வதேச குறும்பட விழாவில் சிறந்த மிட்நைட் குறும்படத்துக்கான விருதினை தி ஸ்லீப்வார்க்கர்ஸ் பெற்றுள்ளதாக ராதிகா ஆப்தே தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராதிகா ஆப்தே சமீபத்திய பேட்டியில்  கூறியது: "நான் டைரக்‌ஷன் பணியை மிகவும் ரசித்தேன், ஏனென்றால் அதைச் செய்யும்போது நான் உற்சாகமாக இருக்கிறேன், மக்கள் இதை விரைவில் பார்க்க முடியும் என்று நம்புகிறேன். ஒரு இயக்குனராக நான் மேலும் பயணம் செய்வேன் என்று நம்புகிறேன்! "

இந்த கதையை தேர்வு செய்த காரணத்தையும் அவர் கூறினார் "படம் என்ன என்பது உண்மையில் டிரெய்லரில் தெரியாது.  கடந்த வருடம் நான் டைவிங் செய்ய ஆரம்பித்தேன், அப்போதுதான் இந்த குறும்படத்துக்கான கதை எனக்கு தோன்றியது ’ என்று ராதிகா ஆப்தே கூறினார்.

இது அவர் இயக்கிய முதல் குறும்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி ராதிகா ஆப்தே ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது

 

 

Radhika Aptes directorial debut'The Sleepwalkers' wins award

People looking for online information on Radhika Apte, Short Film, The sleepwakers will find this news story useful.