www.garudabazaar.com
iTechUS

பிக் பாஸ் வீட்டுக்குள்ளயே அசிம்க்கு வந்த மிரட்டல் 😅.. "அட யாருப்பா அந்த ஹவுஸ்மேட்டு?"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

முதல் நாள் தொடங்கி கடைசி நாள் வரை தமிழில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் சென்றிருந்தது.

Asal Kolaar and Manikanta about azeem game inside bigg boss

Image Credit : Vijay Television

Also Read | "ஒன்றரை வாரம் என்னை கதறி கதறி அழ வெச்சாங்க".. அசிம் முன் புலம்பிய Housemate!!.. என்ன நடந்துச்சு?

மக்களையும் வெகுவாக கவர்ந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கிய 21 போட்டியாளர்களும் ஏராளமானவர்களின் ஃபேவரைட் ஆகவும் இருந்தனர். சண்டை, கலகலப்பு, வாக்குவாதங்கள் என முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலேவிற்கு அசிம், ஷிவின் மற்றும் விக்ரமன் ஆகியோர் முன்னேறி இருந்தனர். இறுதியில் அசிம் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட இரண்டாவது இடத்தை விக்ரமனும் மூன்றாவது இடத்தை ஷிவினும் பிடித்திருந்தனர்.

Asal Kolaar and Manikanta about azeem game inside bigg boss

Image Credit : Vijay Television

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து பல நாட்கள் ஆகியும் தொடர்ந்து பிக் பாஸ் குறித்த பேச்சு பரவலாக இருந்து வருகிறது. அப்படி இருக்கையில், Behindwoods -ன் "மக்களுடன் அசிம்" என்ற பிரத்யேக நிகழ்ச்சியில் அசிம் கலந்து கொண்டார். அப்போது அவருடன் பிக் வீட்டில் சக போட்டியாளர்கள் மற்றும் நண்பர்களான மணிகண்டா மற்றும் அசல் கோலார் ஆகியோரும் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.

இதில், பிக் பாஸ் வீட்டிற்குள் ஏதாவது ஒரு தருணத்தில், அசிம் ஏன் இப்படி செய்கிறார் என தோன்றியதா என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.

Asal Kolaar and Manikanta about azeem game inside bigg boss

Image Credit : Vijay Television

இது பற்றி பேசிய,மணிகண்டா, "எனக்கு என்னன்னா இவன் டாஸ்க்ல வந்து ரொம்ப சைலன்ட்டா இருப்பான். வந்து விளையாடுறா, எனக்கு அப்பதான் ஒரு போட்டியே கிடைக்கும்ன்னு நான் சொன்னா, 'இல்ல மச்சான் எனக்கு எங்க விளையாடணுமோ அங்க விளையாடுவேன்னு' சொல்லுவான். அப்ப புரியல, இப்ப புரியுது" என சிரித்துக் கொண்டே தெரிவித்தார்.

அதே போல, பிக் பாஸ் வீட்டுக்குள் நிறைய பேர் இருந்தாலும் தனியாக இருப்பது போல் அசிம் ஃபீல் செய்ததாகவும், ஒரு சில முறை துக்கத்துடன் தனியாக அசிம் நின்றது தொடர்பான வீடியோக்கள் வெளியே பெரிய அளவில் ட்ரெண்ட் ஆனதாகவும் இதுகுறித்து கேள்வி எழுப்பப்படது. அப்போது பேசிய அசல் கோலார், "அது ஃபீல் பண்ணல அடுத்து என்ன பண்ணலாம் நீ யோசிச்சிட்டு இருந்துருப்பாரு" என ஜாலியாக அசிமை குறிப்பிட்டார்.

Asal Kolaar and Manikanta about azeem game inside bigg boss

Image Credit : Vijay Television

தொடர்ந்து பேசிய அசிம், "திருப்பி வெளியே போயிட்டு வீட்டுக்குள்ள வந்த அசல் கோலார், யாருக்குமே தெரியாம தனியா கூட்டிட்டு போய் என்ன மிரட்ட எல்லாம் செஞ்சான். 'இதுக்கு மேல வாய தொறந்தே அண்ணன்னு கூட பாக்க மாட்டேன். அடிச்சு சாவடிச்சிடுவேன். அப்படியே கம்முனு இருன்னு' எல்லாம் சொன்னான்.

அது மாதிரி மணிகண்டாவும், பேசாம இருடா நீ எதுவுமே பேசாத. ரெண்டு வாரம் எதுவும் பேசிடாதடான்னு சொன்னான். முட்டை சண்டை வந்தப்போ கூட ரெண்டு வாரம் பட்டினி கிடந்தாலும் பரவாயில்ல, நீ ஏதும் பேசிடாதன்னு மணி சொன்னான். என்னதான் வெளியே இருந்து பேசுவாங்க, ஆனா அந்த வீட்டுக்குள்ள ஏதோ நம்மள பண்ணும்" எனக்கூறிய அசிம், பிக் பாஸ் கொடுக்கும் டாஸ்க்குகள் மூலமாக எப்படி வேண்டுமானாலும் ட்விஸ்ட் நடக்கும் என்பதற்கு சில விளக்கங்களையும் கொடுத்திருந்தார்.

Also Read | "நான் அவுட்டானது பிரச்சனை இல்ல, அசிம் வெளிய வந்திருந்தா எனக்கு செருப்படி தான்".. பிரபல போட்டியாளரின் அப்பா சொன்ன விஷயம்!!

பிக் பாஸ் வீட்டுக்குள்ளயே அசிம்க்கு வந்த மிரட்டல் 😅.. "அட யாருப்பா அந்த ஹவுஸ்மேட்டு?" வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Asal Kolaar and Manikanta about azeem game inside bigg boss

People looking for online information on Asal kolaar, Azeem, Azeem Interview, Manikanta will find this news story useful.