www.garudabazaar.com

"நான் பெற்ற Bigg Boss டைட்டிலை தனாவுக்கு பகிர விரும்புறேன்" - அசிம்‌ சொன்ன காரணம்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் மிகவும் வெற்றிகரமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக பிக் பாஸ் பார்க்கப்பட்டு வருகிறது. தமிழில் இதுவரை 6 சீசன்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முடிவடைந்துள்ளது. இதன் ஆறாவது சீசன், சமீபத்தில் முடிவடைந்திருந்தது.

Azeem share his bigg boss trophy with dhanalakshmi

இதில் மொத்தம் 21 பேர் போட்டியாளர்களாக களமிறங்கி இருந்த சூழலில், ஃபினாலேவிற்கு விக்ரமன், அசிம் மற்றும் ஷிவின் ஆகியோர் முன்னேறி இருந்தனர். இதில், அசிம் டைட்டில் வின்னராக தேர்வாக, இரண்டாவது இடத்தை விக்ரமனும், 3 ஆவது இடத்தை ஷிவினும் பிடித்திருந்தனர்.

பிக் பாஸ் முடிவடைந்து சில நாட்கள் ஆனாலும் தொடர்ந்து பிக் பாஸ் குறித்து பேச்சு இணையத்தில் பரவலாக இருந்து வருகிறது. அதே போல, 21 போட்டியாளர்களும் தனித்திறனுடன் விளங்கி இருந்ததால், சிலர் ஃபின்னாலே வரை முன்னேறாமல் வெளியேறி இருந்தது, அவரது ரசிகர்களை சற்று ஏமாற்றம் அடைய வைத்திருந்தது.

அதிலும் சிறந்த போட்டியாளராக வலம் வந்த தனலட்சுமி, நிகழ்ச்சியின் பாதியில் வெளியேறி இருந்தது பரவலாக பேசப்பட்டு வந்தாலும், வெளியே அவருக்கு அமோக வரவேற்பை கொடுத்து "மக்கள் செல்வி" என்ற பட்டத்தையும் ரசிகர்கள் கொடுத்திருந்தனர். அந்த அளவுக்கு பிக் பாஸ் கொடுத்த டாஸ்க் மற்றும் போட்டிகளில் தனலட்சுமி மிக சிறப்பாக செயல்பட்டது இதற்கு காரணமாக அமைந்திருந்தது.

இந்த நிலையில் சமீபத்தில், Behindwoods சேனலில் "மக்களுடன் அசிம்" என்ற நிகழ்ச்சி நடைபெற்றிருந்தது. இதில், அசிமுடன் தனலட்சுமி கலந்து கொண்டிருந்தார்.

அசிம் மற்றும் தனலட்சுமி ஆகியோர், பிக் பாஸ் வீட்டுக்குள் ஆரம்பத்தில் சண்டை போட்டு கொண்டிருந்தாலும், பின்னர் நட்பாகி ஒரு உடன்பிறவா அண்ணன், தங்கை உறவும் அவர்களுக்கு இடையே உருவானது. அப்படி இருக்கையில் அசிமுடன் இந்த நிகழ்ச்சியில் தனலட்சுமி பங்கெடுத்திருந்தார். அவர்கள் இருவரும் ஏராளமான சுவாரஸ்ய தகவல்களை இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்ட சூழலில், தனலட்சுமிக்காக அசிம் செய்த செயல் ஒன்று, பலரையும் நெகிழ வைத்து வருகிறது.

அசின் வென்ற பிக் பாஸ் கோப்பை அங்கே இருக்க அதனை அசிம் எடுத்து தனலட்சுமி கையில் கொடுத்ததுடன் மட்டுமில்லாமல், "நான் இந்த விருதை ஷேர் பண்ணிக்கனும்னு நினைக்கிறேன். ஏன்னா எல்லா வகையிலும் எனக்கு சமமா ரொம்ப  திறம்பட தகுதி படைத்தவர் என் தங்கச்சி" எனக்கூறி கோப்பையை தனலட்சுமி கையில் கொடுத்திருந்த நிகழ்வு பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

"நான் பெற்ற BIGG BOSS டைட்டிலை தனாவுக்கு பகிர விரும்புறேன்" - அசிம்‌ சொன்ன காரணம்.! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Azeem share his bigg boss trophy with dhanalakshmi

People looking for online information on Azeem, Bigg boss, Dhanalakshmi will find this news story useful.