www.garudabazaar.com

“அந்த Aunty-க்கு சிறு நீர் பார்சல்..” .. மாறி மாறி கலாய்த்த ரச்சு - பிரியங்கா! bigg boss kondattam

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்று நடைபெற்று வந்த தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சயின் 6 ஆவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடந்து முடிந்தது.

Rachitha and Priyanka thuglife bigg boss Kondattam

Also Read | Bakasuran : செல்வராகவன் நடிப்பில் பகாசூரன்.. பட போஸ்டரை ஒட்டிய இயக்குநர் மோகன்.ஜி .. வீடியோ

சுமார் 106 நாட்கள் நடந்த இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலகலப்பு, சண்டை, வாக்குவாதங்கள், எமோஷனல் என அனைத்தும் நிறைந்து விறுவிறுப்புடன் சென்றதால் பார்வையாளர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்திருந்தது. தொடர்ந்து பிக் பாஸ் போட்டியாளர்கள் மற்றும் நிகழ்ச்சி குறித்த பேச்சு அதிகம் பரவலாக சமூக வலைத்தளங்களில் இருந்து வருகிறது. போட்டியாளர்கள் அனைவரும் வெளியே சென்றாலும் மக்கள் அனைவரும் அமோகமான வரவேற்பு கொடுத்ததும் வருகின்றனர்.

Rachitha and Priyanka thuglife bigg boss Kondattam

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து அதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரையும் வைத்து பிக் பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சி விஜய் டிவியில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் தற்போது பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி வார இறுதியில் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் இறுதியில் கலந்துகொண்ட பிக்பாஸ் 6வது சீசன் போட்டியாளர்கள் குழந்தைகள் போல் பேச, டிஎஸ்கே இவர்களை கலகலப்பாக கேள்விகளை கேட்டார்.

Rachitha and Priyanka thuglife bigg boss Kondattam

அப்போது குழந்தை போல் பேசிய நடிகை ரச்சிதா மகாலட்சுமி, எனக்கு தண்ணீர் என்றால் கண்டம், பிக்பாஸ் என்றால் கண்டம், மாஸ்டர் என்றாலும் கண்டம் என காமெடியாக பேசினார். அப்போது ரச்சிதாவை கலாய்க்கும் விதமாக குழந்தை போலவே பிரியங்கா, டிஎஸ்கேவிடம், “அண்ணாச்சி.. அண்ணாச்சி.. டயர்டா இருக்கு.. சிறு நீர் குடிக்கிறீங்களா?” என கேட்டார். அப்போது பேசிய ரச்சிதா, “அந்த ஆண்டிக்கு சிறு நீர் பார்சல் பண்ணிக் கொடுங்க அங்கிள்.. அந்த ஆண்டி தான் கேக்குறாங்க” என பதிலுக்கு கலாய்த்தார்.

Rachitha and Priyanka thuglife bigg boss Kondattam

முன்னதாக பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது ராஜா ராணி டாஸ்கின்போது தூய தமிழில் அனைவரும் பேசிக்கொண்டனர். அப்போது ராபர்ட் மாஸ்டரிடம் ரச்சிதா, கொஞ்சம் டென்ஷனாக இருப்பதாகவும், தனக்கு  குடிப்பதற்கு சிறு நீர் கொண்டு வாருங்கள் என்றும் கூறிவிட்டார். இந்த விஷயம் அப்போது வைரலானது. அடிப்படையில் கன்னட மொழி பேசக்கூடிய ரச்சிதா தூய தமிழில் பேசுவதே  பெரிய விஷயம் என்று பலரும் பாராட்டினர். எனவே சிறிதளவு நீர் வேண்டும் என்பதை சுருக்கமாக சொல்லும் பொழுது அவர் சிறு நீர் என சொல்ல அந்த விஷயம் வைரலானது. இப்போது அதையே பிரியங்கா மறைமுகமாக கலாய்த்து ஜாலி பண்ண, பதிலுக்கு ரச்சிதாவும் கலாய்க்க நிகழ்ச்சி மிகவும் Fun ஆகவும் கலகலப்பாகவும் போனது.

Also Read | “மாஸ்டர்னாலே கண்டம்..” .. டிவி நிகழ்ச்சியில் பொசுக்குனு சொன்ன ரச்சிதா.!.. 😅

தொடர்புடைய இணைப்புகள்

Rachitha and Priyanka thuglife bigg boss Kondattam

People looking for online information on Bigg boss, Rachitha, VJ Priyanka will find this news story useful.