Maha
www.garudabazaar.com

ஒடிசா முதல்வரை சந்தித்த நடிகர் மாதவனின் குடும்பத்தார்.. மாதவன் போட்ட நெகிழ்ச்சியான பதிவு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் மாதவன் மற்றும் அவரது குடும்பத்தார் ஒடிசா மாநிலத்தின் முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்துள்ளனர்.

R Madhavan his son meet Odisha CM Naveen Patnaik

Also Read | பா. ரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு நடிக்கும் புதிய படம்.. பிறந்தநாள் பரிசாக வந்த FIRST LOOK போஸ்டர்!

மாதவன்

இந்திய திரை உலகில் பிரபல நடிகராக அறியப்படும் மாதவன் தமிழில் அலைபாயுதே படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். அதன் பிறகு மின்னலே, கன்னத்தில் முத்தமிட்டாள் ஆகிய படங்களின் வாயிலாக தமிழகம் முழுவதும் திரை ரசிகர்களை ஈர்த்தார் மாதவன். தமிழ் மட்டுமல்லாது 3 இடியட்ஸ், ரங்தே பசந்தி உள்ளிட்ட இந்தி படங்களிலும் நடித்து புகழ்பெற்றார். இவர் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களிலும் துடிப்பாக இயங்கிவருபவர். அண்மையில் இவரது இயக்கத்தில் வெளியான ராக்கெட்ரி திரைப்படம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கழகமான இஸ்ரோவின் முன்னாள் ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணன் அவர்களது வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தில் நம்பி கதாப்பாத்திரத்தில் மாதவன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

R Madhavan his son meet Odisha CM Naveen Patnaik

வேதாந்த்

நடிகர் மாதவனின் மகனான வேதந்த் கடந்த ஆண்டில் நடைபெற்ற லித்வியன் ஓபன் நீச்சல் போட்டியில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றதுடன், டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்ற டேனிஷ் நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். தொடர்ந்து தேசிய மற்றும் சர்வதேச அளவில் நீச்சல் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற 48-வது ஜூனியர் நேஷனல் அக்வாடிக் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்று அசத்தினார் வேதாந்த். இதனை தொடர்ந்து ஒடிசா மாநிலத்தின் முதல்வர் நவீன் பட்நாயக் மாதவன் மற்றும் அவரது குடும்பத்தை நேரில் வரவழைத்து வேதந்தை பாராட்டியுள்ளார்.

R Madhavan his son meet Odisha CM Naveen Patnaik

நெகிழ்ச்சி

இதனை தொடர்ந்து, நடிகர் மாதவன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,"மாண்புமிகு முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். விளையாட்டுத் துறையில் ஒடிசா முக்கிய மாநிலமாக திகழ்வதற்கு நீங்கள் எடுத்துவரும் முயற்சிகள் அபரிமிதமானவை. விளையாட்டு துறையின் எதிர்காலத்திற்கான உங்களது திட்டங்கள் புத்துணர்ச்சி அளிக்கக்கூடியவை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் மாதவன் அவரது மனைவி சரிதா மற்றும் அவரது மகன் வேதாந்த் ஆகியோர் ஒடிசா முதல்வரை சந்தித்திருக்கின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by R. Madhavan (@actormaddy)

Also Read | இன்னும் திரையரங்குகளில் மாஸ் காட்டும் 'விக்ரம்'.. செமயான கமல் லுக்கில் 50 வது நாள் போஸ்டர்!

தொடர்புடைய இணைப்புகள்

R Madhavan his son meet Odisha CM Naveen Patnaik

People looking for online information on Madhavan, Odisha CM, Odisha CM Naveen Patnaik will find this news story useful.