www.garudabazaar.com

நீச்சல் போட்டியில் புதிய சாதனை படைத்த மகன்.. நெகிழ்ச்சியில் நடிகர் மாதவன் பகிர்ந்த வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நீச்சல் போட்டியில் தேசிய அளவில் சாதனை படைத்த தனது மகனின் வீடியோவை பெருமிதத்துடன் பகிர்ந்துள்ளார் நடிகர் மாதவன். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Actor Madhavan shares video about his son record breaking swimming

Also Read | மதன் கார்க்கி வரிகளில் சித் ஶ்ரீராம் பாடிய ROMANTIC பாடல்.. பிரம்மாஸ்திரா படத்தின் அடுத்த Super Update!

மாதவன்

இந்திய திரை உலகில் பிரபல நடிகராக அறியப்படும் மாதவன் தமிழில் அலைபாயுதே படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். அதன் பிறகு மின்னலே, கன்னத்தில் முத்தமிட்டாள் ஆகிய படங்களின் வாயிலாக தமிழகம் முழுவதும் திரை ரசிகர்களை ஈர்த்தார் மாதவன். தமிழ் மட்டுமல்லாது 3 இடியட்ஸ், ரங்தே பசந்தி உள்ளிட்ட இந்தி படங்களிலும் நடித்து புகழ்பெற்றார். இவர் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களிலும் துடிப்பாக இயங்கிவருபவர். அண்மையில் இவரது இயக்கத்தில் வெளியான ராக்கெட்ரி திரைப்படம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கழகமான இஸ்ரோவின் முன்னாள் ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணன் அவர்களது வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தில் நம்பி கதாப்பாத்திரத்தில் மாதவன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் மாதவன் தனது மகன் வேதாந்த் தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளதாக வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். கடந்த ஆண்டில் நடைபெற்ற லித்வியன் ஓபன் நீச்சல் போட்டியில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்ற வேதாந்த், டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்ற டேனிஷ் நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். தொடர்ந்து தேசிய மற்றும் சர்வதேச அளவில் நீச்சல் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.

Actor Madhavan shares video about his son record breaking swimming

சாதனை

இந்நிலையில், புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் உள்ள பிஜு பட்நாயக் நீச்சல் குளத்தில் நடைபெற்று வரும் 48-வது ஜூனியர் நேஷனல் அக்வாடிக் சாம்பியன்ஷிப் போட்டியில், நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் மாதவன் ஆண்களுக்கான குரூப் 1, 1500 மீட்டர் ஃப்ரீஸ்டைல் போட்டியில் தேசிய அளவிலான புதிய சாதனையை படைத்திருக்கிறார். 780 மீட்டர் நீச்சலில் ஆத்விக் என்பவருடைய முந்தையை சாதனையை 16 நிமிடங்களில் நீந்தி முறியடித்திருக்கிறார் வேதாந்த்.

தனது மகனுடைய சாதனைகளை அவ்வப்போது சமூக வலை தளங்களில் பகிர்ந்துகொள்வது நடிகர் மாதவனின் வழக்கம். அந்த வகையில் இன்று அவர் பகிர்ந்துள்ள வீடியோவில் தேசிய அளவிலான ஜுனியர் பிரிவில் 1500 மீட்டர் நீச்சல் போட்டியில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளதாகவும், "எப்போதும் நெவர் சொல்லாதீர்கள்" எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து பலரும் வேதாந்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

 

Also Read | அடேங்கப்பா.. 'RRR' படத்துல அந்த சீன்.. மிரண்டு போய் பாராட்டிய மார்வெல் இயக்குனர்கள்!

Actor Madhavan shares video about his son record breaking swimming

People looking for online information on Madhavan Son, Madhavan Son record breaking swimming, R. Madhavan will find this news story useful.