Yaanai

நம்பி நாராயணன் கெட்டப்பில் மனைவியோடு மாதவன் … குடும்பத்தினர் ரியாக்ஷன்…. Viral Tweet

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் மாதவன் தன்னுடைய மனைவியோடு இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

Madhavan tweet about family reaction the pic

Also Read | “எளிமை…. Inspiration…” பில்கேட்ஸை சந்தித்த பிரபல நடிகர் மகேஷ் பாபு…. வைரல் Tweet

ராக்கெட்ரி

2017 ஆம் ஆண்டு இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்! (Rocketry - The Nambi Effect) எனும் படத்தின் முன் தயாரிப்பு பணிகளை தொடங்கினார் நடிகர் மாதவன். கிரையோஜனிக் இஞ்சின் தொழில்நுட்பத்தை வெளிநாட்டுக்கு தேச விரோதமாக விற்றதாக இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கடந்த 1994 ஆம் ஆண்டு கேரள போலிசாரால் கைது செய்யப்பட்டார். பின் பல ஆண்டுகள் கழித்து, இவ்வழக்கில் நம்பி நாராயணன் குற்றமற்றவர் என உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது.

ரிலீஸ்

2019 ஜனவரியில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்த படத்தை நடிகர் மாதவனே இயக்குகிறார். இது அவர் இயக்கும் முதல் திரைப்படமாகும். இந்த படம் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தியில் என நான்கு மொழிகளில் உருவாகிறது. மலையாளம், கன்னடத்தில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது.. இந்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் பின்னர் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது ஜூலை 1 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகிறது.

Madhavan tweet about family reaction the pic

சர்வதேச ப்ரமோஷன்

இந்நிலையில் சமீபத்தில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த படம் திரையிடப்பட்டது. அதுபோலவே அமெரிக்காவின் டைம்ஸ் ஸ்கொயரில் படத்தின் டிரைலரை மாதவன் வெளியிட்டார். சமீபத்தில் சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் சூர்யா கலந்துகொண்டு பேசியது கவனம் ஈர்த்தது. இந்த படத்தில் நடிகர்கள் சூர்யா மற்றும் ஷாருக் கான் ஆகியோர் கௌரவ வேடத்தில் நடித்துள்ளதாக மாதவன் முன்பே அறிவித்திருந்தார்.

Madhavan tweet about family reaction the pic

மாதவன் ஜாலி ட்வீட்

இந்நிலையில் தற்போது நம்பி நாராயணனின் வயதான கெட்டப்பில் தனது மனைவியோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள மாதவன் “இந்த புகைப்படத்தை எனது மனிவியின் குடும்பத்தினருக்கு அனுப்பிய போது அவர்கள் அதிர்ச்சியடைந்து விட்டார்கள்” என்று கூறி டிவீட் செய்துள்ளார். மாதவனின் அந்த ட்வீட்டும் புகைப்படமும் தற்போது கவனத்தை ஈர்த்து வருகின்றன.

Also Read | ‘தமிழ் படம்’ அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘ரத்தம்’… வெளியான சூப்பர் அப்டேட்

தொடர்புடைய இணைப்புகள்

Madhavan tweet about family reaction the pic

People looking for online information on Madhavan, Madhavan tweet, Rocketry the Nambi Effect will find this news story useful.