Maha
www.garudabazaar.com

பா. ரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு நடிக்கும் புதிய படம்.. பிறந்தநாள் பரிசாக வந்த FIRST LOOK போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பா. ரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு நடிக்கும் புதிய படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

First look posters of PaRanjith Bommai Nayagi, starring YogiBabu

Also Read | ஐரோப்பா பைக் டூரை முடித்து சென்னை திரும்பிய அஜித்குமார்.‌. AIRPORT-ல் ரசிகர்களுடன் PHOTO!

தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித். தமிழ் சினிமாவின் திசைவழிப்போக்கை மாற்றிய இயக்குனர்களின் பெயர்களை பட்டியலிட்டால் இவரின் பெயரை எவராலும் தவிர்க்க முடியாது.

இயக்குனர் வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்து “அட்டக்கத்தி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, “மெட்ராஸ்” திரைப்படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார் இயக்குனர் பா.ரஞ்சித். “மெட்ராஸ்” படத்தை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தொடர்ச்சியாக கபாலி, காலா என இரண்டு படங்களை கொடுத்து இருந்தார். இதில் கபாலி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூலை வாரிக்குவித்தது.

First look posters of PaRanjith Bommai Nayagi, starring YogiBabu

இதற்கிடையே நீலம் புரொடக்சன்ஸ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பல குறும்படங்களையும், “பரியேறும் பெருமாள்”, “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு”, சென்ற ஆண்டு கிறிஸ்துமசை முன்னிட்டு வெளியான 'ரைட்டர்' போன்ற படங்களையும் தயாரித்துள்ளார்.

தற்போது பா.இரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் பொம்மை நாயகி திரைப்படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடிக்கிறார். இன்று யோகிபாபுவின் 37வது பிறந்தநாளை ஒட்டி படக்குழு முதல் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. சிறுமியுடன் கடற்கரையில் யோகிபாபு இருப்பது போல் போஸ்டர் அமைந்துள்ளது.

அறிமுக இயக்குநர் ஷான் இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் கடந்த ஜனவரி 2021 ஆம் ஆண்டு தொடங்கியது.   இந்த படத்திற்கு சுந்தரமூர்த்தி இசையமைக்க, அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். செல்வா எடிட்டிங்கை கவனிக்க, கலை இயக்குனராக ஜெய ரகு பணிபுரிகிறார்.

First look posters of PaRanjith Bommai Nayagi, starring YogiBabu

கடைசியாக நடிகர் ஆர்யாவை வைத்து இவர் இயக்கிய “சார்பட்டா பரம்பரை” திரைப்படம் ஜூலை 22ம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித் இயக்கத்தில் 3 படங்கள் தயாராகின்றன..  “நட்சத்திரம் நகர்கிறது” என பெயரிடப்பட்டுள்ள படத்தை ஒரு காதல் Drama திரைப்படமாக ரஞ்சித் எடுத்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது. மேலும் சியான் விக்ரம் நடிப்பில் ஒரு படத்தையும் வேட்டுவம் என்ற படத்தையும் இயக்க உள்ளார்.

Also Read | 'வாரிசு' படத்தின் டான்ஸ் மாஸ்டர் ஷோபிக்கு இரண்டாவது 'வாரிசு'!

தொடர்புடைய இணைப்புகள்

First look posters of PaRanjith Bommai Nayagi, starring YogiBabu

People looking for online information on Bommai Nayagi Movie First Look Poster, Pa Ranjith, PaRanjith Bommai Nayagi Movie, Yogi Babu will find this news story useful.