Maha
www.garudabazaar.com

KGF Chapter 2 படத்தின் 100 வது நாள்.. உருக்கமான கிளைமாக்ஸ் காட்சியை வெளியிட்ட படக்குழு! வைரல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்த திரைப்படம் 'கே ஜி எஃப் சாப்டர் 2’.

KGF Chapter 2 Movie 100 days poster video

Also Read | பா. ரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு நடிக்கும் புதிய படம்.. பிறந்தநாள் பரிசாக வந்த FIRST LOOK போஸ்டர்!

இந்த படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு (ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி) வெளியாகி இருக்கிறது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிட்டார். இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'கே ஜி எஃப் சாப்டர்  2' படத்தில் கதையின் நாயகனாக ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ்  நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தார்.

இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பஸுரூர் இசையமைத்தார்.

KGF Chapter 2 Movie 100 days poster video

இந்த படம் உலகம் 10,000 திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது என படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த 10,000 திரையரங்குகளில் கன்னடம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளும் அடங்கும். தமிழ் நாட்டில் மட்டும் இந்த படம் 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் (ஸ்கிரீன்) ரிலீசாகி உள்ளது. இந்த படம் இந்தியாவில் மட்டும் முதல் நாளில் 134.5 கோடி ரூபாயை மொத்த வசூலாக வசூலித்தது. முதல் இரண்டு நாளில் இந்த படம் 240 கோடி ரூபாயை வசூலித்தது. இந்த படம் உலகம் முழுவதும் முதல் 4 நாளில் 546 கோடி ரூபாயை மொத்த வசூலாக வசூலித்தது.

KGF Chapter 2 Movie 100 days poster video

உலாம் முழுவதும் 1200 கோடிக்கும் மேல் மொத்த வசூலாக ஈட்டியது. இந்நிலையில் இன்று இந்த படத்தின் 100வது நாளை முன்னிட்டு படக்குழு பிரத்யேக போஸ்டரை ரிலீஸ் செய்தது. மேலும், படத்தின் கிளைமாக்ஸை வெளியிட்டு 100வது நாளில் ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளது. சத்தியமான 100 வது நாள் என தலைப்பிட்டு தாய் - மகன் பாச வீடியோவை வெளியிட்டுள்ளது.

இன்னும் திரையரங்குகளில் மாஸ் காட்டும் 'விக்ரம்'.. செமயான கமல் லுக்கில் 50 வது நாள் போஸ்டர்!

KGF CHAPTER 2 படத்தின் 100 வது நாள்.. உருக்கமான கிளைமாக்ஸ் காட்சியை வெளியிட்ட படக்குழு! வைரல் வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

KGF Chapter 2 Movie 100 days poster video

People looking for online information on KGF Chapter 2, KGF Chapter 2 Movie 100 days poster will find this news story useful.