Maha
www.garudabazaar.com

இன்னும் திரையரங்குகளில் மாஸ் காட்டும் 'விக்ரம்'.. செமயான கமல் லுக்கில் 50 வது நாள் போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் 3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது.

Kamal Haasan Vikram Movie 50th Day Theatrical Poster

Also Read | 'வாரிசு' படத்தின் டான்ஸ் மாஸ்டர் ஷோபிக்கு இரண்டாவது 'வாரிசு'!

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.  அனிருத் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே இந்த படத்தை தயாரித்துள்ளது.

இந்த படத்தில் கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா, ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இதற்காக கமல்ஹாசன், சூர்யாவுக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை பரிசாக அளித்தார்.

உலகம் முழுவதும் விக்ரம் படம் மிகப்பெரிய வசூலை அள்ளிக்குவித்தது. கடந்த 2 ஆண்டுகளில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் உருவெடுத்தது.

Kamal Haasan Vikram Movie 50th Day Theatrical Poster

இதுவரை வெளியான தமிழ் படங்களில் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் உருவெடுத்தது.

விக்ரம் படத்தின் ஒட்டுமொத்த தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளின் OTT ஒளிபரப்பு செய்யும் உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Kamal Haasan Vikram Movie 50th Day Theatrical Poster

இந்த ஜூலை மாதம் 8 ஆம் தேதியன்று விக்ரம் படம் 5 மொழிகளிலும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியானது.

இந்நிலையில், இன்று விக்ரம் திரைப்படம் 50வது நாளைக் கடந்துவிட்டது. இதனை பிரத்யேக போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது. நாயகன் மீண்டும் வரான் என்ற பாடல் வரிகளை தாங்கி போஸ்டர் அமைந்துள்ளது.

Kamal Haasan Vikram Movie 50th Day Theatrical Poster

ஒடிடியில் வெளியான பின்னும் இந்த  படம் வெற்றிகரமாக இன்னும் நகர்ப்புறத்தில் உள்ள சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடுகிறது.

Also Read | பா. ரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு நடிக்கும் புதிய படம்.. பிறந்தநாள் பரிசாக வந்த FIRST LOOK போஸ்டர்!

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan Vikram Movie 50th Day Theatrical Poster

People looking for online information on Kamal Haasan, Lokesh Kanagaraj, Vikram Movie, Vikram Movie 50th Day Theatrical Poster will find this news story useful.