இரண்டு கைகள் போன பிறகும் தன்னம்பிக்கையுடன் உழைக்கும் நபர்.. நடிகர் மாதவன் ஷேர் செஞ்ச வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இரண்டு கைகளையும் இழந்த பின்னரும் தன்னம்பிக்கையுடன் உழைக்கும் ம்னிதர் ஒருவருடைய வீடியோவை நடிகர் மாதவன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Actor R Madhavan praises differently abled man’s talent

Also Read | காதலருடன் LATEST புகைப்படத்தை பகிர்ந்த நடிகை பிரியா பவானி சங்கர்! கூட யாரெல்லாம் இருக்காங்க?

மாதவன்

இந்திய திரை உலகில் பிரபல நடிகராக அறியப்படும் மாதவன் தமிழில் அலைபாயுதே படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். அதன் பிறகு மின்னலே, கன்னத்தில் முத்தமிட்டாள் ஆகிய படங்களின் வாயிலாக தமிழகம் முழுவதும் திரை ரசிகர்களை ஈர்த்தார் மாதவன். தமிழ் மட்டுமல்லாது 3 இடியட்ஸ், ரங்தே பசந்தி உள்ளிட்ட இந்தி படங்களிலும் நடித்து புகழ்பெற்றார். இவர் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களிலும் துடிப்பாக இயங்கிவருபவர். இந்நிலையில் இரண்டு கைகளையும் இழந்த நபர் ஒருவரின் வீடியோவை மாதவன் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு அவரை பாராட்டியிருக்கிறார். இது சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Actor R Madhavan praises differently abled man’s talent

வைரல் வீடியோ

நடிகர் மாதவன் பகிர்ந்த இந்த வீடியோவில் இரண்டு கைகளையும் இழந்த ஒருவர், பனி படர்ந்த சூழ்நிலையில் கோடாரியால் விறகுகளை வெட்டுகிறார். கைகள் இல்லையென்றாலும் தன்னுடைய கழுத்துப் பகுதியில் கோடாரியை பிடித்து இவர் வெட்ட, மரக்கட்டைகள் இரண்டாக பிளந்து தெறிக்கின்றன.

இந்த வீடியோவை ஜான் பம்ப்லியானோ என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து," மனம் இருந்தால் மார்க்கமுண்டு. விளம்பரத்திற்காக அல்லாமல் தனது பணியினை சிறப்பாக முடிக்கும் இந்த நபர் பாராட்டுக்கு உரியவர்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த வீடியோ பதிவை ஷேர் செய்த மாதவன் கைகளை கூப்பும் ஸ்மைலி மற்றும் ஹார்டின் ஸ்மைலியை பதிவிட்டுள்ளார்.

Actor R Madhavan praises differently abled man’s talent

சமுக வலை தளங்களில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவில் "உடல் குறைபாடுகள் தடை கிடையாது. நம்முடைய மனம் தான் மனித குலத்திற்கு மிகப்பெரிய தடைகளை தோற்றுவிக்கும்" என ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார். இன்னொருவர்,"தேவையே கண்டுபிடிப்புகளின் தாய்" என கமெண்ட் செய்திருக்கிறார். இப்படி நடிகர் மாதவன் பகிர்ந்த இந்த வீடியோவிற்கு லைக்குகளும் கமெண்ட்களும் குவிந்துவருகின்றன.

 

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

 

இரண்டு கைகள் போன பிறகும் தன்னம்பிக்கையுடன் உழைக்கும் நபர்.. நடிகர் மாதவன் ஷேர் செஞ்ச வீடியோ..! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor R Madhavan praises differently abled man’s talent

People looking for online information on மாதவன், Differently abled man talent, R Madhavan, R Madhavan praises differently abled man talent will find this news story useful.