தியேட்டர்ல படம் பார்க்கணுமா? பிவிஆரின் அதி நவீன சுத்தமான தியேட்டரை இந்த வீடியோல பாருங்க

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த லாக்டவுனில் அவரவர் வீட்டில் குவாரண்டைன் ஆகியிருக்க  சினிமா ரசிகர்கள் தியேட்டருக்குப் போய் படம் பார்க்க முடியவில்லையே என்று வருந்தி வருகின்றனர். தங்களுக்குப் பிடித்தமான நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் படங்களை முதல் நாள் முதல் காட்சியை திரை அரங்கத்தில் சென்று பார்த்த நினைவுகளில் காலத்தை ஓட்டி வருகின்றனர்.

PVR Theatres welcome back audience in the safest way

சமீபத்தில் ஜோதிகா நடித்த 'பொன்மகள் வந்தாள்' அமேஸான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த பென்குயின் படமும் அமேஸானில் வெளியாகியுள்ளது. போலவே இன்னும் சில படங்கள் இந்தத் தளத்தில் வெளி வர பேசப்பட்டுவருகிறது.

இந்நிலையில் தொடர் லாக்டவுனால் சில மாதங்களுக்கு தியேட்டர்களை திறப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டு வரும் நிலையில், பிவிஆர் திரையரங்கம் திரை ரசிகர்களுக்கு ஒரு மகத்தான பரிசை வழங்கவிருக்கிறது.

ஆம் விரைவில் மீண்டும் தியேட்டர்கள் இயங்கத் தொடங்கிவிடும் போது தங்கள் தியேட்டர் எவ்வளவு சுத்தமாக, எவ்வளவு பாதுகாப்பானதாக இருக்கப் போகிறது, சோஷியல் டிஸ்டன்ஸ் எப்படி கடைபிடிக்கப்படவிருக்கிறது. இருக்கை வசதிகள் எப்படி இருக்கும் என்பது உள்ளிட்ட அத்தனை செயல்பாடுகளையும் ஒரு வீடியோவாக எடுத்து வேளியிட்டுள்ளனர்.

இனி தியேட்டருக்கு பயம் இன்று போய் படம் பார்க்கலாம். சுத்தமும் சுகாதாரமும் இருக்கும் இடங்களில் கொரோனாவுக்கு என்ன வேலை என்று சொல்லாமல் சொல்லிவிட்டனர் பிவிஆர் நிறுவனத்தினர்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

PVR Theatres welcome back audience in the safest way

People looking for online information on Lockdown, PVR theatre will find this news story useful.