கடற்கரையில் தன் மகனுடன் தல அஜித் - வைரலாகும் ஃபோட்டோ இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 10, 2019 10:41 AM
போனி கபூர் தயாரிப்பில் தல அஜித் ஹீரோவாக நடித்து வெளியான படம் 'நேர்கொண்ட பார்வை'. 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' படங்களின் இயக்குநர் வினோத் இந்த படத்தை இயக்கினார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தல அஜித் வினோத் இயக்கத்தில் 'தல 60' படத்தில் நடிக்கவிருக்கிறார். போலீஸ் கதையாக உருவாகவிருக்கும் இந்த படத்தையும் போனி கபூர் தயாரிக்கவிருக்கிறார்.
இந்நிலையில் டெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான துப்பாக்கிச்சுடும் போட்டியில் அஜித் கலந்துகொள்ள சென்ற போது ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதுவரை சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் காட்சியளித்த அஜித், இதில் முற்றிலும் மாறுபட்ட லுக்கில் காட்சியளிக்கிறார். இந்த கெட் அப் சேஞ்ச் தல 60 படத்துக்காக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தல அஜித், அவரது மனைவி ஷாலினி மற்றும் மகனுடன் சென்னை திருவான்மியூர் கடற்கரையில் நேரம் செலவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.