www.garudabazaar.com

"நீ மான் குட்டி.. நான் யானைக்குட்டி".. தயாரிப்பாளர் LIBRA ரவீந்தரின் கலகல போஸ்ட்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தயாரிப்பாளர் லிப்ரா ரவீந்தரின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

Producer libra Ravindar Chandrasekaran Latest post Goes viral

                     Images are subject to © copyright to their respective owners.

தமிழில் லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில், நட்புன்னா என்னன்னு தெரியுமா,முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட சில திரைப்படங்களை தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகரன். ரவீந்தர் சந்திரசேகரன், கூர்கா, சஙகத் தமிழன் ஆகிய படங்களை விநியோகம் செய்துள்ளார்.

ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் குறித்து நம் Behindwoods-ல் தனது பார்வையை முன் வைக்கும் நிகழ்ச்சி ஒன்றையும் ரவீந்திர் வழங்கி வந்தார். மேலும், Fatman என்ற அடையாளத்தால் அறியப்படும் ரவீந்தர், இந்த பெயர் மூலம் மக்கள் மத்தியிலும் மிகப் பிரபலமானவர். இவர் பிரபல சீரியல் நடிகை விஜே மகாலட்சுமியை செப்டம்பர் 1, 2022-ல் திருமணம் செய்துகொண்டார்.

Producer libra Ravindar Chandrasekaran Latest post Goes viral

Images are subject to © copyright to their respective owners.

இவர்களது திருமணம் திருப்பதியில் நடைபெற்றது. 90 ஸ் கிட்ஸ் மத்தியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக நன்கு அறியப்பட்டவர் மகாலட்சுமி. இதன் பின்னர் சின்னத்திரை நடிகையாக வலம் வந்த அவர், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் அன்பே வா சீரியலிலும் நடித்து வருகிறார்.

திருமணத்திற்கு பிறகு, அவ்வப்போது தம்பதி சகிதமாய் புகைப்படங்களை பதிவிடும் ரவீந்தர் அதற்கு அளிக்கும் கேப்ஷன்கள் தான் அல்டிமேட்டாக அமையும். இதனாலேயே இவருடைய பதிவுகள் சோசியல் மீடியாவில் வைரலாவதும் உண்டு. அந்த வகையில் ரவீந்தர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் தனது மனைவி மகாலட்சுமியுடன் காரில் அமர்ந்திருக்கிறார் ரவீந்தர். அதில் மகாலட்சுமி மஞ்சள் நிறத்தில் உடையணிந்திருக்கிறார்.

Producer libra Ravindar Chandrasekaran Latest post Goes viral

Images are subject to © copyright to their respective owners.

இந்த பதிவில்,"நீ மஞ்சள் நிறம் கொண்ட மான் குட்டியோ.. இல்ல மஞ்சள் சுடிதார் போட்ட பெண் குட்டியோ..ஆனா உன்கூட வாழ்க்கைய ரசிச்சு வாழுற யானைக்குட்டி நான் தான்." என குறிப்பிட்டுள்ளார் ரவீந்தர். இந்த பதிவு நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Producer libra Ravindar Chandrasekaran Latest post Goes viral

People looking for online information on Producer, Ravindar, Vj mahalakshmi will find this news story useful.