www.garudabazaar.com

ஹர்திக் பாண்டியா திருமண விழா.. KGF நடிகர் யஷ்ஷை சந்தித்த பிரபல தமிழக கிரிக்கெட் வீரர்..! வைரல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராக்கிங் ஸ்டார் யஷ், பிரபல தமிழக கிரிக்கெட் வீரருடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

KGF Actor Yash with Tamilnadu Cricketer Dinesh Karthik

Images are subject to © copyright to their respective owners.

கேஜிஎஃப் 1 மற்றும் கேஜிஎஃப்  2 ஆகிய இரண்டு படங்களின் மிகப்பெரிய பிரம்மாண்ட வெற்றியை  அடுத்து இப்போது இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகராக யஷ் மாறியுள்ளார்.

சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் ஒரு மத்திய தர குடும்பத்தில் இருந்து வந்து சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருக்கும் யாஷுக்கு இந்தியா முழுக்க ரசிகர்கள் உருவாகி உள்ளனர்.

சமீபத்தில் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'கே ஜி எஃப் சாப்டர்  2' படத்தில் கதையின் நாயகனாக ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ்  நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தார்.

இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

இந்த படம் கடந்தாண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு (ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய் வசூலை குவித்தது.

KGF படங்களுக்கு பின்னர் நடிகர் யஷ், தனது அடுத்த படம் குறித்து எந்த தகவலும் வெளியிடாமல் இருந்தார். அவருடைய அடுத்த பட அறிவிப்பை சினிமா ரசிகர்கள் பலர் எதிர் நோக்கி இருந்தனர்.

யஷ் தனது அடுத்த 19-வது படத்தை பிரபல கன்னட தயாரிப்பாளர் வெங்கட் நாராயணாவின் KVN PRODUCTIONS நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

KGF Actor Yash with Tamilnadu Cricketer Dinesh Karthik

Source: DK Instagram

இந்நிலையில் தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், நடிகர் யஷ்ஷை சந்தித்த புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த ஃபோட்டோவை தினேஷ் கார்த்திக் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில் 'சலாம் ராக்கி பாய்' என தினேஷ் கார்த்திக் குறிப்பிட்டுள்ளார். ஹர்திக் பாண்டியா திருமண நிகழ்வில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

KGF Actor Yash with Tamilnadu Cricketer Dinesh Karthik

People looking for online information on Dinesh Karthik, KGF, Yash will find this news story useful.