www.garudabazaar.com

"தில்'லுக்கு துட்டு.. தயாரிப்பாளர் தில் ராஜூ.. வாரிசு - 2 எப்போ Sir ?".. விஜய் Fun Speech 😅

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றிருந்தது.

ctor Vijay Talks about Varisu Movie Producer Dhill Raju

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யின் பேச்சு எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக இருந்து வந்தனர். அப்படி ஒரு சூழலில், நடிகர் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசி இருந்த விஷயங்கள் பெரிய அளவில் தற்போது வரை ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

ctor Vijay Talks about Varisu Movie Producer Dhill Raju

வாரிசு படத்தில் நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

ctor Vijay Talks about Varisu Movie Producer Dhill Raju

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த 24.12.2022 ஆம் தேதியன்று நடைபெற்றது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த நிகழ்வில், விஜய், ராஷ்மிகா மந்தனா , எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ,  இயக்குநர் வம்சி பைடிபள்ளி, இசையமைப்பாளர் தமன், ஷங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், நடிகை ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர்.

ctor Vijay Talks about Varisu Movie Producer Dhill Raju

இந்த நிகழ்ச்சியில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு குறித்து பேசிய நடிகர் விஜய், " இன்னும் நிறைய படங்கள் நீங்கள் செய்யப் போகிறீர்கள். வெற்றிகரமாக நிறைய பணம் சம்பாதிக்க போறீங்க. அதை முன்னாடியே கணிச்சு தான் நம்ம நண்பர் சந்தானம் "தில்"லுக்கு துட்டுன்னு படம் எடுத்தாரு" என விஜய் தில் ராஜுவை குறிப்பிட்டதும் ஒட்டுமொத்த அரங்கமுமே சிரித்தது. தயாரிப்பாளர் தில் ராஜூ கூட இதனை கேட்டு சிரித்தபடி இருந்தார். அந்த சமயத்தில் அவரிடம், "வாரிசுக்கு வாழ்த்துக்கள் சார். நான் உங்களுக்கு பிறந்த வாரிச சொன்னேன். Congratulations சார். வாரிசு 2 எப்ப சார்?. இப்ப நான் படத்தை பத்தி கேட்டேன்" என விஜய் கூறியதும் மீண்டும் ஒருமுறை ஒட்டுமொத்த அரங்கம் சிரிப்பலையில் அதிர்ந்தது.

தொடர்புடைய இணைப்புகள்

ctor Vijay Talks about Varisu Movie Producer Dhill Raju

People looking for online information on Dhill Raju, Varisu, Vijay will find this news story useful.