www.garudabazaar.com
iTechUS

"இவங்க பிக்பாஸ் ஜெயிச்சா நியாயமா இருக்கும்".. காரணத்துடன் FATMAN ரவீந்தர் EXCLUSIVE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

Fatman Ravindar prediction for BiggBoss Season 6 Tamil winner

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Fatman Ravindar prediction for BiggBoss Season 6 Tamil winner

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ராம் மற்றும் ஜனனி, தனலெட்சுமி, மணிகண்ட ராஜேஷ், ரச்சிதா ஆகியோர் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். கடந்த வாரம் ஏடிகே வெளியேறினார்.

நேற்று, சிறந்த போட்டியாளராக வலம் வந்த கதிரவன், பண மூட்டையை எடுத்துக் கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். முன்னதாக பிக்பாஸ் வீட்டுக்குள் பண மூட்டை ஒன்று தொங்கவிடப்பட்டிருந்தது. அதில் இருக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு ஃபைனலிஸ்ட் 6 பேரில் யார் வேண்டுமானாலும் வெளியேறலாம் எனவும் நேரம் ஆக, பணமூட்டையில் இருக்கும் பணமும் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Fatman Ravindar prediction for BiggBoss Season 6 Tamil winner

தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் அசிம், விக்ரமன், மைனா, அமுதவாணன், ஷிவின் உள்ளிட்ட 5 போட்டியாளர்கள் உள்ளே இருக்கின்றனர். தற்போது மீண்டும் பணப் பெட்டி அறிமுகமாகியுள்ளது. ஃபைனலிஸ்ட் போட்டியாளர்களில் யார் வேண்டுமானாலும் அதனை எடுத்துக்கொண்டு வெளியேறலாம் என இப்போதும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐவரில் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு ஒருவர் வெளியேறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Fatman Ravindar prediction for BiggBoss Season 6 Tamil winner

இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை Fatman ரவீந்தர் அளித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தனது பார்வையையும் ரவீந்தர் முன் வைத்தார். மேலும், "தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் வெற்றி பெற்றால் நியாயமாக இருக்கும்  என்று நினைக்கிறார்கள்?" என்ற கேள்விக்கு, "இப்போதைய இறுதி பட்டியலில் ஷிவின் வெற்றி பெற்றால் நியாயமாக இருக்கும் என்று நினைக்கிறேன். பாலின ரீதியாக நான் இதை சொல்லவில்லை. காரணம் ஏனென்றால் அவரிடம் குறைபாடு இருந்தாலும், பகை உணர்ச்சியை யாரிடமும் கக்குவதில்லை. அவருடைய உணர்ச்சியை நன்றாக கட்டுப்படுத்தி உள்ளார். விக்ரமன், அசீம் போல எந்த ஒரு பின்புலமும் ஷிவினுக்கு கிடையாது. தன்னுடைய திறமையை மட்டுமே ஷிவின் மூலதனமாக வைத்து இவ்வளவு தூரம் வந்துள்ளார்". என ரவீந்திர் கூறியுள்ளார்.

"இவங்க பிக்பாஸ் ஜெயிச்சா நியாயமா இருக்கும்".. காரணத்துடன் FATMAN ரவீந்தர் EXCLUSIVE! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Fatman Ravindar prediction for BiggBoss Season 6 Tamil winner

People looking for online information on Azeem, Bigg Boss Final Winner, Bigg Boss Tamil Final Winner, Biggboss, Fatman, Vikraman will find this news story useful.