www.garudabazaar.com
iTechUS

"PARALLEL UNIVERSE".. தளபதி 67 படத்தை வாழ்த்திய கைதி தயாரிப்பாளர்.. TRENDING

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ்.

Kaithi Producer Tweet about Thalapathy 67 Movie Parallel Universe

                         Images are subject to © copyright to their respective owners.

Also Read | தனி விமானத்தில் தளபதி 67 படக்குழு.. அப்போ ஷூட்டிங் இந்த ஊர்லயா? செம்ம

இதன் பின்னர், கார்த்தியை வைத்து லோகேஷ் இயக்கிய 'கைதி' திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதற்கு அடுத்தபடியாக, விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'மாஸ்டர்'  படமும் ஹிட்டாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூன்-3 ஆம் தேதியன்று ரிலீஸ் ஆகி இருந்த விக்ரம் திரைப்படத்தையும் லோகேஷ்  இயக்கி இருந்தார். கமல், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்தது.

Kaithi Producer Tweet about Thalapathy 67 Movie Parallel Universe

Images are subject to © copyright to their respective owners.

மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு, மீண்டும் விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக தளபதி 67 படத்தில் இணைவது குறிப்பிடத்தக்கது.

தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பீஸ்ட் படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா பணிபுரிகிறார். இயக்குனர் மிஷ்கின், கௌதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்‌.

Kaithi Producer Tweet about Thalapathy 67 Movie Parallel Universe

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் நேற்று தளபதி 67 படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பை கைதி படத்தின் தயாரிப்பாளர் பிரபு தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து "தளபதி 67 படத்தை Parallel Universe-ல் இருந்து வாழ்த்துகள்" என கூறியுள்ளார்.

தளபதி 67 படம் LCU-வில் அடங்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் கைதி படத்தின் தயாரிப்பாளர் பிரபுவின் இந்த ட்வீட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Kaithi Producer Tweet about Thalapathy 67 Movie Parallel Universe

Images are subject to © copyright to their respective owners.

LCU என்பது லோகேஷ் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் என்பதன் சுருக்கமாகும். கைதி & விக்ரம் திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இந்த தொடர்புகளின் அடிப்படையில் LCU அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை LCU-வில் நடிகர் கார்த்தி, கமல்ஹாசன், சூர்யா, நரேன், பஹத் பாசில், அர்ஜூன் தாஸ் ஆகியோர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | தளபதி 67 படத்தின் ஷூட்டிங்.. தனி விமானத்தில் பிரபல நடிகையுடன் பயணமாகும் த்ரிஷா? செம அப்டேட்

தொடர்புடைய இணைப்புகள்

Kaithi Producer Tweet about Thalapathy 67 Movie Parallel Universe

People looking for online information on Kaithi Producer, Kaithi Producer Tweet, Kaithi Tamil, Thalapathy 67 will find this news story useful.