www.garudabazaar.com

"BIGGBOSS வீட்ல என்னோட ஒரு நண்பர்".. பிரபல நடிகைக்கு வாழ்த்து கூறிய அசீம்! என்ன சொல்லிருக்காரு 😍

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பிரபல நடிகைக்கு அசீம்‌ பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

BiggBoss Season 6 Winner Azeem Birthday Wish to Sheriina

Image Source: Vijay TV & Disney Plus Hotstar

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 தமிழ், நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்,  கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, ஈழத்தை சேர்ந்த தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 21 நபர்கள்  பங்கேற்றனர்.

இறுதி போட்டிக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து அசிம், விக்ரமன், ஷிவின் உள்ளிட்ட 3 போட்டியாளர்கள் தகுதி பெற்றனர்.

இறுதி போட்டியில் முதல் நபராக ஷிவின் எலிமினேட் ஆனார். பின்னர் விக்ரமன் & அசீம் இடையே ஒருவர் பிக்பாஸ் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி அசீம் இந்த சீசனில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக நடிகர் கமல்ஹாசனால் அறிவிக்கப்பட்டார். அசீம்க்கு பரிசாக மாருதி சுசூகி பிரேஸா காரும், 50 லட்ச ரூபாய் காசோலை, வெற்றிக் கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.

BiggBoss Season 6 Winner Azeem Birthday Wish to Sheriina

தற்போது பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் பிக்பாஸ் போட்டியாளர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் அசீம், தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஷெரினாவை வாழ்த்தி அவருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், பிக்பாஸ் வீட்டின் என்னுடைய ஒரு நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். கடவுள் உன்னை ஆசிர்வதிப்பாராக.😍 உன்னுடன் இணைந்து வேலை செய்யும் தருணத்தை எதிர்நோக்கி ❤️" என அசீம் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

BiggBoss Season 6 Winner Azeem Birthday Wish to Sheriina

People looking for online information on Azeem, Biggboss, Sheriina will find this news story useful.