சினிமாவால் சமூக மாற்றம் சாத்தியமா? – விவாதிக்கும் தயாரிப்பாளர் தனஞ்செயனின் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சினிமாவால் சமூகத்தில் மாற்றத்தை உண்டாக்க முடியுமா என்பது பற்றி பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது கருத்துகளை ஒரு வீடியோ மூலம் பதிவு செய்துள்ளார்.

Producer G.Dhananjayan discuss whether films helps the society

சில தினங்களுக்கு முன் ஹைதராபாத்தின் டாக்டர் பிரியங்கா ரெட்டிக்கு நேர்ந்த கொடூர சம்பவத்தில் இருந்து தொடங்கிய அவர், ஊழல், சாதிப் படுகொலை, விவசாயிகள் பிரச்சினை, கல்வி பிரச்சினை என சமூகத்தை ஆட்டிப்படைக்கும் பிரச்சினைகளை தன் பேச்சின் ஊடாக தொடுகிறார்.

இவை அனைத்தையும் கருப்பொருளாக வைத்து உருவாக்கப்பட்ட படங்கள், நிஜ கள நிலவரங்கள் மற்றும் புள்ளி விவரங்களை பகிர்ந்த அவர் இவைகள் குறித்த நேரடி சித்திரத்தை பார்வையாளர்களுக்கு வழங்குகிறார்.

இப்பிரச்சினைகள் மீதான தன் கருத்தை இடையிடையே பகிரும் அவர் அதற்கான தீர்வையும் திரைப்படம் ஒன்றின் வசனத்தைக் கொண்டே ரத்தின சுருக்கமாக முடிக்கிறார்.

சினிமாவால் சமூக மாற்றம் சாத்தியமா? – விவாதிக்கும் தயாரிப்பாளர் தனஞ்செயனின் வீடியோ வீடியோ