தெலுங்கு ஹீரோவுக்காக இந்த தமிழ் இயக்குநருடன் இணையும் தயாரிப்பாளர் தனஞ்செயன்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 10, 2019 11:09 AM
பாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பாக தமிழ் படங்களை தயாரித்தும் விநியோகித்தும் வருபவர் தனஞ்செயன். இவர் தற்போது தெலுங்கில் ஒரு படத்தை தயாரிக்கவிருக்கறார். அதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகர் முதன்மை வேடத்தில் நடிக்கிறார். அவருடன் சத்யராஜ், நாசர், பிரம்மானந்தம் உள்ளிட்டோர் நடிக்கவிருக்கின்றனர்.
இந்த படத்தில் பிரபல இயக்குநரும் திரைக்கதை எழுத்தாளருமான ஜான் மகேந்திரன் இணைந்துள்ளார். இந்த படத்தை சைத்தான், சத்யா ஆகிய படங்களை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கவிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் முதல் துவங்கும் என்று கூறப்படுகிறது.
Tags : BOFTA Media Works, Dhananjayan, Rajasekhar