மக்கள் செல்வி வரலட்சுமி நடித்துள்ள 'டேனி' செகண்ட் லுக் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மக்கள் செல்வி வரலட்சுமி சரத்குமார் முதன்மை வேடத்தில் நடித்து உருவாகியிருக்கும் படம் 'டேனி'. இந்த படத்தை அறிமுக இயக்குநர் லா.சி.சந்தானமூர்த்தி இயக்கியுள்ளார்.

Varalaxmi Sarathkumar's Danny Second look poster released By Dhananjayan

இந்த படத்தை பிஜி மீடியா வொர்க்ஸ் சார்பாக பி.ஜி.முத்தையா மற்றும் எம்.தீபா ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த படத்துக்கு ஆனந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் தயாநிதி இந்த படத்தின் பாடல்களுக்கு இசையமைக்க, சாய் பாஸ்கர் இந்த படத்துக்கு பின்னணி இசையமைத்துள்ளார்.

எஸ்.என்.ஃபாசில் இந்த படத்தின் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகியிருந்து. தற்போது இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.