‘கர்மா இஸ் பூமராங்'.. ஜிம் மாஸ்டரைப் பழிக்குப்பழி வாங்கிய பிரியா பவானி சங்கர்! Viral வீடியோ இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை பிரியா பவானி சங்கர் தனது உடற்பியிற்சியாளர் பழிக்குபழி வாங்கும் வீடியோ வைரலாகியுள்ளது.

Priya Bhavani Shankar take Revenge Her Gym Master

தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து, சீரியலில் நடித்து பின்னர் வெள்ளித்திரைக்கு வந்தவர் பிரியா பவானிசங்கர். அவர் நடித்த முதல் படமான மேயாத மான் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து பிரியா நடித்த கடைக்குட்டி சிங்கம் படமும் பெரிய ஹிட். சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் சேர்ந்து அவர் நடித்த மான்ஸ்டர் படமும் சூப்பர் ஹிட்டானதால், ஹாட்ரிக் வெற்றி பெற்ற சந்தோஷத்தில் இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் பிரியா, சமூக வலைதளங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். அவர் வெளியிடும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களுக்கு லைக்ஸ் அள்ளுகிறது. அந்தவகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில் தனது உடற்பயிற்சியாளரை பழிக்குபழி வாங்குகிறார் பிரியா. 'கர்மா இஸ் பூமராங்' எனும் வாசகத்தை பதிவிட்டு அந்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். வீடியோவில் உடற்பயிற்சியாளருக்கு அதிகபடியான எடைக்கல்லை மாட்டி, உடற்பயிற்சி செய்ய வைக்கிறார் பிரியா.

எத்தனை முறை என்னை இது போல் செய்திருப்பாய். இப்போ மாட்டுநியா' எனும் மைண்ட் வாய்ஸ் மூடில் பிரியா இந்த வேலையை செய்கிறார். பிரியா மாட்டிவிட்ட எடைக்கல்லுடன் உடற்பயிற்சியாளரும் உடற்பயிற்சி செய்கிறார். அருகில் உள்ள அனைவரும் சத்தம் போட்டு சிரிக்கின்றனர். இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.