எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘மான்ஸ்டர்’ திரைப்படத்தின் ரொமாண்டிக் பாடலான ‘அந்தி மாலை நேரம்’ பாடலின் வீடியோ வெளியானது.
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஃபேன்டசி காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார்.
கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். கடந்த மே.17ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள காதல் பாடலான ‘அந்தி மாலை நேரம்’ பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
பிரபல பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ள ‘அந்தி மாலை நேரம்’ பாடலை பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார். இந்த பாடல் எஸ்.ஜே.சூர்யா-பிரியா பவானி ஷங்கரின் திருமண நிச்சயதார்த்த காட்சிகளின் பின்னணியில் உருவாகியுள்ளது.
சித் ஸ்ரீராமின் குரலில் ஓர் அழகிய மெலடி.. - மான்ஸ்டரில் இருந்து வெளியான வீடியோ பாடல் வீடியோ