“தமிழ் கெட்ட வார்த்தை தான் பேசுவேன்” - பிரியா பவானி சங்கர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

எஸ்.ஜே.சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்துள்ள ‘மான்ஸ்டர்’ திரைப்படம் இன்று (மே.17) உலகம் முழுவதும் வெளியானது.

Priya Bhavani Shankar shares her working experience in SJ Suryah's Monster film

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஃபேன்டசி காமெடி திரைப்படமாக வெளியாகியுள்ள இப்படத்திற்கு கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

ரத்ன குமார் இயக்கத்தில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான ‘மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை பிரியா பவானி சங்கர், பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ‘மான்ஸ்டர்’ படத்தில் நடித்திருக்கிறார். இதையொட்டி Behindwoods நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரியா பவானி சங்கர், மான்ஸ்டர் திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துக் கொண்டார்.

அப்போது பேசிய அவர், எஸ்.ஜே.சூர்யாவை பற்றி நான் கேட்டு தெரிந்துக் கொண்ட விஷயங்களுக்கும் அவருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. மிகவும் எளிமையானவர். வாலி படம் குறித்தும், அஜித் மற்றும் விஜய் சார் குறித்த நினைவுகளை எல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்டில் பகிர்ந்துள்ளார். அருமையாக கதை சொல்வார். அவர் சொல்லும் விஷயங்கள் கண்முன் காட்சியாக ஓடும் எனவும் கூறினார்.

இதையடுத்து, Never Have I Ever செக்மெண்டில் விளையாடிய பிரியா பவானி சங்கர், தனது கண்டதும் காதல், சீரியல் ஷூட்டிங்கில் போட்ட சண்டைகள் பற்றி பேசியதுடன், சும்மா இந்த நாய் பேயெல்லாம் கிடையாது, நான் தமிழ் கெட்ட வார்த்தைகள் பேசுவேன் என்றார்.

“தமிழ் கெட்ட வார்த்தை தான் பேசுவேன்” - பிரியா பவானி சங்கர் வீடியோ