“யாரும் மாப்பிள்ளை தரமாட்டாங்க” - மேட்ரிமோனி சுவாரஸ்யம் சொன்ன ‘மான்ஸ்டர்’ நடிகை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

எஸ்.ஜே.சூர்யா மற்றும் பிரியா பவானி ஷங்கர் இணைந்து நடித்துள்ள ‘மான்ஸ்டர்’ திரைப்படம் கடந்த மே.17ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

Actress Priya Bhavani Shankar reveals her matrimonial profile description stories

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஃபேன்டசி காமெடி திரைப்படமாக வெளியாகியுள்ள இப்படத்திற்கு கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், Behindwoods நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரியா பவானி ஷங்கர், மான்ஸ்டர் படம் குறித்தும், தனது சொந்த வாழ்க்கை பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களையும் பகிர்ந்துக் கொண்டார். Behindwoods-ன் 5 minutes வித் பிரியா பவானி ஷங்கர், என்ற செக்மெண்ட்டில் விளையாடிய பிரியாவிடம், மேட்ரிமோனியல் சைட்டில் உங்களது விவரம் பற்றிய கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “கல்லூரி முடிச்சிட்டு இருந்த சின்ன கேப்பில் கல்யாணம் பண்ண மேட்ரிமோனி சைட்ல ரெஜிஸ்டர் பண்ணேன். என்கிட்ட இருந்த நல்ல போட்டோக்களை அப்லோட் செய்து வைத்தேன்”.

“அதில் என்னை பற்றிய சுய விவரங்கள் தான் ஹைலைட்டே. நான் இப்படி தான் இருப்பேன். என்னுடைய சுதந்திரம் எனக்கு முக்கியம் என பல ஸ்ட்ரிக்ட் கண்டிஷனுடன் மெச்சூரிட்டி இல்லாத பல விஷயங்களை பகிர்ந்திருந்தேன். அதை என் நண்பர்கள் பார்த்துவிட்டு பயங்கரமாக கலாய்த்தனர். இப்படி எல்லாம் போட்டா யாரு மாப்பிள்ளை தருவா என்றனர். நான் பதிவிட்ட விவரங்களுக்கு மாப்பிள்ளை இல்ல வீடு கூட யாரும் கொடுக்க மாட்டாங்க” என்றார்.

“யாரும் மாப்பிள்ளை தரமாட்டாங்க” - மேட்ரிமோனி சுவாரஸ்யம் சொன்ன ‘மான்ஸ்டர்’ நடிகை வீடியோ