'தினமும் என்ன அவ அப்படித் தான் சொல்றா' - சினேகா பற்றி ரசிகருக்கு பதிலளித்த பிரசன்னா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'ஃபைவ்  ஸ்டார்' படத்தின் தமிழில் ஹீரோவாக அறிமுகமானவர் பிரசன்னா. அதனைத் தொடர்ந்து 'அழகிய தீயே', 'கண்டநாள் முதல்' படங்களின் மூலம் கவனம் ஈர்த்தார்.

Prasanna answers to fan about Actress sneha in twitter

'அஞ்சாதே' படத்தில் வில்லத்தனமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது அவர் அருண் விஜய்யுடன் இணைந்து 'மாஃபியா' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து மிஷ்கினின் இயக்கத்தில் விஷாலுடன் இணைந்து 'துப்பறிவாளன் 2' படத்தில் நடிக்கவிருக்கிறார்.

பிரசன்னா கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகை சினேகாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஹான் என்ற 4 வயது ஆண் குழந்தை உள்ளது. தற்போது சினேகா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். 

இந்நிலையில் ரசிகர் ஒருவர் 'வசீகரா' படத்துல சினேகா சொல்ற டயலாக், ''என்ன தவிர வேற எவலாயவது பார்த்த கொன்னுடுவேன்'' இப்பவும் வேற லெவல். பிரசன்னா புரோ செம லக்கி நீங்க'' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதற்கு பதிலளித்த பிரசன்னா, இத தான் டெய்லியும் என்கிட்ட சொல்றாங்க என்று தெரிவித்துள்ளார்.