தனுஷின் ENPT, கௌதம் படம் பற்றிய சூப்பர் அப்டேட் சொன்ன பிரபல தயாரிப்பாளர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த 'கோமாளி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் ஆர்ஜே பாலாஜியின் 'எல்கேஜி' திரைப்படம் ரசிகர்களை கவரந்தது.

Vels Film International announces Dhanush's ENPT, Gautham Menon's Joshua

இதனையடுத்து தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் வெளியிடுகிறது. மேலும், ஜீவாவின் 'சீறு', கௌதம் மேனனின் 'ஜோஷ்வா', ஆர்ஜே பாலாஜி மற்றும் நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன்', சிவாவின் 'சுமோ' உள்ளிட்ட படங்களையும் வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படங்கள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இந்த படங்களின் ஸ்பெஷல் கண்டென்ட் வருகிற நவம்பர் 24 ஆம் தேதி வெளியாகவிருப்பதாக வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக அறிவித்துள்ளது.