பிக்பாஸ் பிரபலம் நடித்துள்ள படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட யுவன் ஷங்கர் ராஜா
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 02, 2019 01:51 PM
தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் பாடல்களை எழுதியவர் சினேகன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதிவரை போராடி இரண்டாம் இடத்தை பிடித்தார்.

இந்நிலையில் சினேகன் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் படம் பொம்மி வீரன். உழவன் திரைக்களம் தயாரித்துள்ள இந்த படத்தை ரமேஷ் மகாராஜன் இயக்கி வருகிறார். தாஜ் நூர் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் வெளியிட்டுள்ளனர். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சினேகன் கேரளாவின் தையம் கலையின் உடையை அவர் அணிந்துள்ளார்.
என் வளர்ச்சியில் எப்போதும் அக்கறையும் மகிழ்வும் கொண்ட என் நட்புக் குறிய இயக்குனர் அமீர் அவர்களுக்கும் இசையமைப்பாளர் யுவன் அவர்களுக்கும் என் நன்றியும் நட்பும். pic.twitter.com/gncaDmqQRG
— சினேகன் (@SnehanOfficial) September 2, 2019