Babymoon-க்காக லண்டன் பறந்த சினேகா-பிரசன்னா: வைரலாகும் Photos
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 11, 2019 05:31 PM
தமிழ் சினிமாவில் பிரபல ஜோடிகளான அறியப்படும் பிரசன்னாவும், சினேகாவும் கடந்த 2012 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதியினருக்கு விஹான் என்ற 4 வயதான ஆண் குழந்தை உள்ளது.

தற்போது கர்ப்பமாக இருக்கும் சினேகாவிற்கு சமீபத்தில் வளைகாப்பு நடைபெற்றது. வளையல்கள் அணிவித்து அலங்கரிக்கப்பட்டிருந்த சினேகாவின் புகைப்படங்கள் சமீபத்தில் சமுக வலைதளங்களில் வைரலானது.
தற்போது இத்தம்பதியினர் விடுமுறையை கழிக்க லண்டன் சென்றுள்ளனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை சினேகா தற்போது தனுஷூடன் பட்டாஸ் படத்தில் நடித்துள்ளார். பிரசன்னா, அருண் விஜய்யுடன் இணைந்து மஃபியா படத்தில் நடித்து முடித்துள்ளார். கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகியிருந்தது.