www.garudabazaar.com

பாடகி பிரகதி வாங்கிய புதிய விலையுயர்ந்த கார்.. விலை எவ்வளவு? இவ்வளவு ஸ்பெஷல் இருக்கா?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகையும் பாடகியுமான பிரகதி, புதிய விலையுயர்ந்த கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

Pragathi Guruprasad bought a New BMW Car

Images are subject to © copyright to their respective owners.

Also Read | NTR30: Jr NTR ஜோடியாக ஶ்ரீ தேவி மகள் ஜான்வி கபூர்.. முதல் படமே பக்கா மாஸா இருக்கே! வைரல் போஸ்டர்

பாடகி பிரகதி, 2010 இல் ஜெயா டிவியில் ஒளிபரப்பான ஜூனியர்களுக்கான பாடகர் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை வென்றவர். பின்னர் 2012 ஆம் ஆண்டு ஒளிபரப்பான விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாம் இடம் பிடித்தவர். தமிழ் சினிமாவில் சில படங்களில் பிரகதி பாடியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும்  பிரகதி  அவ்வப்போது போட்டோ ஷூட், அமெரிக்காவில் நடக்கும் நிகழ்வுகள், நண்பர்களுடன் இருக்கும் போட்டோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருப்பவர்  பிரகதி. சில ஆங்கில தொடர்களிலும் பிரகதி நடித்துள்ளார்.

Pragathi Guruprasad bought a New BMW Car

Images are subject to © copyright to their respective owners.

சில மாதங்களுக்கு முன் இந்தியாவிற்கு வந்த பிரகதி, நடிகை கீர்த்தி பாண்டியனுடன் சேர்ந்து சுற்றுலா சென்றார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், கீர்த்தி பாண்டியன் & பிரகதி அங்குள்ள தெரு உணவான பிரட் ஆம்லேட், ஜூஸ், பிஸ்கட், டீ, இனிப்பு வகைகள் உண்ணும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தனர். மேலும் பிரகதி பிரபல கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்தை சந்தித்த புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி இருந்தன.

Pragathi Guruprasad bought a New BMW Car

Images are subject to © copyright to their respective owners.

அந்த பயணத்தில் சென்னையில் உள்ள கோயில்களுக்கு சென்று பிரகதி & கீர்த்தி பாண்டியன் சாமி தரிசனம் செய்தனர். நடிகை கீர்த்தி பாண்டியன்,

தும்பா, அன்பிற்கினியாள் படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Pragathi Guruprasad bought a New BMW Car

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் பிரகதி, விலையுயர்ந்த BMW காரை வாங்கியுள்ளார். இது தனது முதல் கார் என்றும், உணர்ச்சி மிகுந்த தருணமாக இது உள்ளது என்றும் பிரகதி குறிப்பிட்டுள்ளார். மேலும் காருடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

Pragathi Guruprasad bought a New BMW Car

Images are subject to © copyright to their respective owners.

இந்த BMW 3 சீரிஸ் கார், இந்திய மதிப்பில் 58 லட்ச ரூபாய் முதல் 65 லட்சம் வரை விற்கப்படுகிறது. மணிக்கு 243-250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் இந்த கார், 5.8 முதல் 6.8 வினாடிகளில் உச்ச வேகத்தை தொடும். பெட்ரோல் & டீசல் என இரண்டு வகைகளிலும் கிடைக்கிறது. இந்த கார் 1995 - 1998 சிசி இன்ஜின் கொள்ளளவு கொண்டது. அமெரிக்க பிரஜையான பிரகதி இந்த காரை அமெரிக்காவில் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | KABZA படத்திற்காக.. செல்ல மகளுடன் போட்டோ ஷூட் நடத்திய ஸ்ரேயா.. வைரல் போட்டோஸ்!

மேலும் செய்திகள்

Pragathi Guruprasad bought a New BMW Car

People looking for online information on BMW Car, Pragathi, Singer Pragathi Guruprasad will find this news story useful.