www.garudabazaar.com

KABZA படத்திற்காக.. செல்ல மகளுடன் போட்டோ ஷூட் நடத்திய ஸ்ரேயா.. வைரல் போட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் “உனக்கு 20 எனக்கு 18”  திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா.

Shriya Saran Latest Photoshoot with Her Daughter for Kabza

Images are subject to © copyright to their respective owners.

Also Read | ஷூட்டிங்கில் காயமடைந்த அமிதாப் பச்சன்.. விலா எலும்பில் முறிவு?.. படப்பிடிப்பு நிறுத்தம்?

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “சிவாஜி” படத்தில் நடித்ததன் மூலம் மிகப்பிரபலமானவர். கடைசியாக தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இவர் ராஜமௌலி இயக்கத்தில் RRR படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.

தமிழில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் இவர் நடித்த நரகாசூரன் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. கன்னட மொழியில் இவர் நடித்துள்ள கப்சா திரைப்படம், மார்ச் மாதம் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Shriya Saran Latest Photoshoot with Her Daughter for Kabza

Images are subject to © copyright to their respective owners.

இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரோ கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தனது கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வதை வாடிக்கையாக செய்து கொண்டிருப்பார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் நிலவுகிறது.

Shriya Saran Latest Photoshoot with Her Daughter for Kabza

Images are subject to © copyright to their respective owners.

தனக்கு குழந்தை பிறந்துவிட்டதாக சில  கடந்தாண்டு  ஸ்ரேயா இன்ஸ்டாகிராமில் அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அந்த அளவுக்கு தனது குழந்தைப் பிறப்பு குறித்து எந்த ஒரு செய்தியையும் அதுவரை பகிராமல் ஸ்ரேயா சரண் அமைதி காத்தார்.

Shriya Saran Latest Photoshoot with Her Daughter for Kabza

Images are subject to © copyright to their respective owners.

மேலும் குழந்தை 2020 ஆம் ஆண்டு லாக்டவுனில் பிறந்ததாக ஸ்ரேயா அறிவித்தார். குழந்தைக்கு ராதா என பெயரிடப்பட்டது. தற்போது குழந்தைக்கு 2 வயது ஆகுவதாகவும் தெரிகிறது.

Shriya Saran Latest Photoshoot with Her Daughter for Kabza

Images are subject to © copyright to their respective owners.

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஸ்ரேயா சரண், கப்சா படத்தின் ரிலீஸை  முன்னிட்டு  குழந்தையுடன் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Shriya Saran Latest Photoshoot with Her Daughter for Kabza

Images are subject to © copyright to their respective owners.

வெண்ணிற உடையில் குழந்தை ராதா ஸ்ரேயாவுடன் காட்சியளிக்கிறது. ஸ்ரேயா தனது மடியில் குழந்தையை தூக்கிக் கொண்டு புகைப்படங்களில் இடம் பெற்றுள்ளார்.

Also Read | NTR30: Jr NTR ஜோடியாக ஶ்ரீ தேவி மகள் ஜான்வி கபூர்.. முதல் படமே பக்கா மாஸா இருக்கே! வைரல் போஸ்டர்

மேலும் செய்திகள்

Shriya Saran Latest Photoshoot with Her Daughter for Kabza

People looking for online information on Shriya Saran, Shriya Saran Latest Photoshoot will find this news story useful.