www.garudabazaar.com

NTR30: Jr NTR ஜோடியாக ஶ்ரீ தேவி மகள் ஜான்வி கபூர்.. முதல் படமே பக்கா மாஸா இருக்கே! வைரல் போஸ்டர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் திரை உலகில் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஜான்வி கபூர்.

Janhvi Kapoor Telugu Debut in NTR30 Movie

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "LEO டைட்டிலை மாத்தனும். தமிழர்கள் தான படம் பாக்குறாங்க".. நாம் தமிழர் கட்சி சீமான் பேட்டி!

பிரபல தயாரிப்பாளர் போனிகபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவி ஆகியோரின் மகளான ஜான்வி கபூர், கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'தடக்' என்னும் திரைப்படத்தின் மூலம், நடிகையாக பாலிவுட்டில் அறிமுகம் ஆகியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, சில படங்கள் நடித்து வந்த ஜான்வி கபூர், சமீபத்தில் சன்னி கௌஷல் மற்றும் மனோஜ் பஹ்வாவுடன் இணைந்து மிலி என்ற சர்வைவல் த்ரில்லர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை மாத்துக்குட்டி சேவியர் இயக்கியிருந்தார்.  இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

Janhvi Kapoor Telugu Debut in NTR30 Movie

Images are subject to © copyright to their respective owners.

இதற்கு முன் வெளியான குட்லக் ஜெர்ரி படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் வெற்றி பெற்ற கோலமாவு கோகிலா திரைப்படத்தின் இந்தி ரீமேக்காக இந்த படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Janhvi Kapoor Telugu Debut in NTR30 Movie

Images are subject to © copyright to their respective owners.

ஜான்வி கபூர், தனது அடுத்த திரைப்படமான மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹியில், ராஜ்குமார் ராவுக்கு ஜோடியாக நடிக்கிறார். மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி  படத்தில் ஜான்வி கபூர் கிரிக்கெட் வீராங்கனையாக நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்திற்காக தினேஷ் கார்த்திக்கிடம் ஜான்வி கபூர் கிரிக்கெட் பயிற்சி எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Janhvi Kapoor Telugu Debut in NTR30 Movie

Images are subject to © copyright to their respective owners.

அதுமட்டுமின்றி, அவர் வருண் தவானுடன் இணைந்து பவால் என்ற  படத்திலும் நடித்து வருகிறார். நிதேஷ் திவாரி இயக்கிய இப்படம் ஏப்ரல் 7, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் ஜான்வி கபூர், இன்று தனது 26-வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். ஜான்வி கபூரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிக்கும் புதிய தெலுங்கு படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஜூனியர் என்டிஆரின் அடுத்த NTR30 படத்தில் அவருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்க உள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேக வடிவமைப்பு போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

Janhvi Kapoor Telugu Debut in NTR30 Movie

Images are subject to © copyright to their respective owners.

இந்த NTR 30 படத்தை கொரட்டலா சிவா இயக்குகிறார். இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார். ரத்னவேலு ISC ஒளிப்பதிவு செய்கிறார். ஶ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

Also Read | ஷூட்டிங்கில் காயமடைந்த அமிதாப் பச்சன்.. விலா எலும்பில் முறிவு?.. படப்பிடிப்பு நிறுத்தம்?

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Janhvi Kapoor Telugu Debut in NTR30 Movie

People looking for online information on Janhvi Kapoor, NTR30, NTR30 Movie Update will find this news story useful.