www.garudabazaar.com

பிரபல தமிழக கிரிக்கெட் வீரருடன் சந்திப்பு.. பாடகி பிரகதி பகிர்ந்த வைரல் போட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகையும் பாடகியுமான பிரகதி, பிரபல கிரிக்கெட் வீரரை சந்தித்துள்ளார்.

Pragathi Guruprasad with Cricketer Abhinav Mukund in Mumbai

பாடகி பிரகதி, 2010 இல் ஜெயா டிவியில் ஒளிபரப்பான ஜூனியர்களுக்கான பாடகர் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை வென்றவர். பின்னர் 2012 ஆம் ஆண்டு ஒளிபரப்பான விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாம் இடம் பிடித்தவர். தமிழ் சினிமாவில் சில படங்களில் பிரகதி பாடியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும்  பிரகதி  அவ்வப்போது போட்டோ ஷூட், அமெரிக்காவில் நடக்கும் நிகழ்வுகள், நண்பர்களுடன் இருக்கும் போட்டோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருப்பவர்  பிரகதி.

இந்நிலையில் இந்தியாவிற்கு வந்துள்ள பிரகதி, நடிகை கீர்த்தி பாண்டியனுடன் சேர்ந்து சுற்றுலா சென்றார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு சென்றுள்ள கீர்த்தி & பிரகதி அங்குள்ள தெரு உணவான பிரட் ஆம்லேட், ஜூஸ், பிஸ்கட், டீ, இனிப்பு வகைகள் உண்ணும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தனர்.

நடிகை கீர்த்தி பாண்டியன், தேவன், இணைந்த கைகள், ஊமைவிழிகள் படங்களில் நடித்த முன்னாள் MLA, நடிகர், தயாரிப்பாளர் அருண் பாண்டியனின் மகளாவார். இவர் இரண்டு படங்களில் தான் நடித்து இருந்தாலும், இணையத்தில் போட்டோ சூட் புகைப்படங்களின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர்.

தும்பா, அன்பிற்கினியாள் படத்தை தொடர்ந்து நடிகை கீர்த்தி பாண்டியன் கண்ணகி படத்தில் நடித்து வருகிறார்.

Pragathi Guruprasad with Cricketer Abhinav Mukund in Mumbai

இந்நிலையில் இந்திய அணிக்காக விளையாடியுள்ள பிரபல தமிழக கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்தை பிரகதி மும்பை இந்தியா கேட்டில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை பிரகதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Pragathi Guruprasad with Cricketer Abhinav Mukund in Mumbai

People looking for online information on Abinav Mukund, Pragathi will find this news story useful.