VIDEO : அரண்மனைக் கிளி நடிகையா இது?... 40 வயதில் 'மரண மாஸ்' நடனம்... அதுவும் தளபதியின் பாட்டுக்கு...!
முகப்பு > சினிமா செய்திகள்1994- ஆம் ஆண்டு பாக்யராஜின் 'வீட்ல விசேஷங்க' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பிரகதி. தமிழில் ஒரு சில படங்களில் நடித்தவர், அதன் பின்பு மலையாளத்திலும் ஒரு படத்தில் நடித்தார். அதற்குப் பின்பு திருமணம் செய்துகொண்டு சிலகாலம் சினிமாவிற்கு முழுக்கு போட்டவர், ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த 'ஜெயம்' படத்தில் சுதாவிற்கு அம்மாவாக நடித்தார். தற்போது அரண்மனை கிளி சீரியலில் ஹீரோவுக்கு தாயாக நடித்து வருகிறார். இவரது நடிப்பு அந்த சீரியலில் மிகவும் பிரபலம்.

உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருவதால், படப்பிடிப்புகளை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் அடைந்து இருக்கும் அவர் தனது மகனுடன் சேர்ந்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்ட வெளியிட்டுள்ளார். இப்போது அவருக்கு வயது 44. மாஸ்டர் படத்தில் வரும் 'வாத்தி கம்மிங் ஒத்தே' பாடலுக்கு இருவரும் நடனம் ஆடுகின்றனர். இந்த வீடியோவை பார்த்த பலரும் 40 வயதிலும் இவ்வளவு பிரமாதமாக நடனமாடுகிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.