www.garudabazaar.com

விபத்தில் நொறுங்கிய கார்.. ‘வேற லெவல்’ பிஎம்டபுள்யூ காரை வாங்கிய KGF நடிகர்.! வைரல் ஃபோட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கேஜிஎஃப் பாக, பாகம் 2 படங்களை இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கினார். யாஷ் ஹீரோவாக நடித்த இந்த படத்தின் வெற்றியைத்தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவானது.

KGF Actor BS Avinash New BMW Car trending

Also Read | காயத்தில் இருந்து மீண்டு வரும் அருண் விஜய்.. ஜிம்மில் இருந்து வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ!

ஹோம்பாலே பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்த 'கே ஜி எஃப் சாப்டர் 2’ படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிட்டார். யாஷ்க்கு ஜோடியாக இப்படத்தில் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார்.

இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பஸுரூர் இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் பி.எஸ்.அவினாஷ், இவர்தான் தற்போது புதிய சொகுசு காரை வாங்கியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரில் உடற்பயிற்சி கூடத்துக்கு சென்றுகொண்டிருந்தபோது இவரது பென்ஸ் காரில் லாரி மோதியது. விபத்துக்குள்ளாகாமல் அவினாஷ்  தப்பித்தார். ஆனால் அவரது கார்ன் டேமேஜ் ஆனது. இந்நிலையில்தான் இவர் தற்போது X5 40i எனும் பிஎம்டபுள்யூ காரை வாங்கியுள்ளதாக கூறப்படும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

4 மாடல் கார்கள்  X5 சீரிஸில் உள்ல நிலையில்,  அவினாஷ் வாங்கியுள்ளதாக கூறப்படும் X5 40i காரின் ஆரம்ப விலை மட்டும் ரூ.96, 50,000  ஆக உள்ளது. அடாப்டீவ் 2 ஆக்ஸில் ஏர் சஸ்பென்ஷன், எம் ஸ்போர்ட் பிரேக், எக்ஸ்டிரைவ், பாதுகாப்புக்காக சரவுண்ட் வியூவ் கேமிரா, பார்கிங் அசிஸ்டன்ஸ், ஸ்மார்ட்போன், ஹெட்-அப் திரை, பார்கிங் என பல வசதிகள் இருக்கும் இந்த ரக கார்களை அரசியல் மற்றும் திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் வாங்குவது வாடிக்கை,

இந்த நிலையில்தான் இந்த காரை நடிகர் அவினாஷ் வாங்கியுள்ளதாக கூறப்படும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Also Read | 50 ஆம் ஆண்டு மணவிழாவில் நடிகர் ஜெயம் ரவி & இயக்குநர் ராஜாவின் பெற்றோர்..

தொடர்புடைய இணைப்புகள்

KGF Actor BS Avinash New BMW Car trending

People looking for online information on BMW, Car, KGF BS Avinash, Trending will find this news story useful.