www.garudabazaar.com

ஸ்வீட் எடுங்க.. ஆண் குழந்தைக்கு அப்பாவான ‘அஞ்சாதே’ நரேன் 😍

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் நரேன் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமானவர்.

Narain Manju Couples blessed with baby boy

Also Read | வதந்தி வெப் சீரிஸில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்.. அவரே வெளியிட்ட நெகிழ்ச்சியான பதிவு!

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, முகமூடி, பள்ளிக்கூடம் கைதி, விக்ரம் ஆகிய வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

மலையாளத்தில் "For the people", பழம் பெரும் இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் நிழல் குத்து, கிளாஸ் மேட் ஆகிய பல படங்களில் நரேன் நடித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய LCU படங்களான கைதி & விக்ரம் படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

Narain Manju Couples blessed with baby boy

நரேன், கடந்த 2007 ஆம் ஆண்டு மஞ்சு என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு தன்மையா என்ற மகள் 2008 ஆம் ஆண்டு பிறந்தார். சிலநாட்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் தனது மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக நரேன் அறிவித்தார்.

Narain Manju Couples blessed with baby boy

இந்நிலையில் நடிகர் நரேன் & மஞ்சு தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் கையை பிடித்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து நரேன் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.

நரேன் - மஞ்சு தம்பதியருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்து கூறி வருகின்றனர்.

 

Also Read | ரன்பீர் கபூர் & ஆலியா பட் குழந்தைக்கு பெயர் வச்சாச்சு.. பேருக்கு இவ்வளவு அர்த்தம் இருக்கா!

தொடர்புடைய இணைப்புகள்

Narain Manju Couples blessed with baby boy

People looking for online information on நரேன், Narain, Narain Manju blessed with baby boy, Narain Manju Couple will find this news story useful.