www.garudabazaar.com

2014ல் பிரதீப் ரங்கநாதன் போட்ட ட்வீட்.. 8 வருடம் கழிச்சு Reply பண்ண பிரேம்ஜி!!.. வைரல்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் ட்வீட்டிற்கு நடிகர் பிரேம்ஜி அமரன் தெரிவித்துள்ள பதில், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Premgi amaren reply to pradeep ranganathan tweet in 2014

கடந்த 2019-ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படம் ‘கோமாளி'. இப்படத்தை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி இருந்தார். காஜல் அகர்வால், யோகிபாபு, சம்யுக்தா, கே. எஸ் ரவிக்குமார், பொன்னம்பலம் என பலர் நடித்து இருந்தனர். காமெடி டிராமாவாக உருவான இந்த படத்தை விமர்சகர்களும், ரசிகர்களும் பாராட்டினர். வசூல் ரீதியாகவும் கோமாளி படம் வெற்றியடைந்தது.

கோமாளி படத்தை தொடர்ந்து 'லவ் டுடே' படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி உள்ளார். அவரே இந்த படத்தில் நாயகனாகவும் நடித்துள்ள நிலையில், அவருக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார். இவர்களுடன் சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

Premgi amaren reply to pradeep ranganathan tweet in 2014

யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்க, தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் தயாரிப்பில் லவ் டுடே திரைப்படம் உருவாகி உள்ளது.

கடந்த நவம்பர் 4 ஆம் தேதி வெளியான லவ் டுடே திரைப்படம், மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றதுடன் மட்டுமில்லாமல், தற்போது வரை பல கோடி ரூபாய் வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆகவும் மாறி உள்ளது. அப்படி ஒரு சூழலில், கடந்த 2014 ஆம் ஆண்டு, பிரதீப் ரங்கநாதன் செய்திருந்த ட்வீட்டிற்கு பிரேம்ஜி அமரன் தற்போது அளித்துள்ள பதில், சோஷியல் மீடியாவில் அதிக கவனம் பெற்று வருகிறது.

குறும்படங்கள் இயக்கியும் நடித்தும் மெல்ல மெல்ல தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆனவர் பிரதீப் ரங்கநாதன். தொடர்ந்து, தற்போது கோமாளி மற்றும் லவ் டுடே உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் சிறந்த இளம் இயக்குனராகவும் உருவெடுத்துள்ளார்.

Premgi amaren reply to pradeep ranganathan tweet in 2014

முன்னதாக, ஆரம்ப காலகட்டத்தில் குறும்படங்கள் எடுத்து வந்த சமயத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு எடுத்த ஷார்ட் ஃபிலிம் ஒன்றின் லிங்க்கை ட்விட்டரில் பகிர்ந்த பிரதீப் ரங்கநாதன், பிரேம்ஜி அமரனை டேக் செய்து, "சார், இது என்னுடைய ஷார்ட் ஃபிலிம். உங்களுக்கு பிடித்திருந்தால் எங்களுக்கு சப்போர்ட் செய்து Retweet செய்யுங்கள் சார்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Premgi amaren reply to pradeep ranganathan tweet in 2014

8 வருடங்கள் கழித்து இந்த ட்வீட்டை பகிர்ந்த பிரேம்ஜி அமரன், "சார் உங்களின் அடுத்த படத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் சார், ப்ளீஸ் 🙏💚" என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்த ட்வீட், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Premgi amaren reply to pradeep ranganathan tweet in 2014

People looking for online information on Love today, Pradeep Ranganathan, Premgi Amaren will find this news story useful.