www.garudabazaar.com

"லவ்வு கிவ்வுனு வரும்.. இத செஞ்சா நீ ராஜானு சொன்னேன்.. ஆனா".. ராபர்ட் குறித்து வனிதா Exclusive

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Vanitha Advise Robert before bigg boss 6 tamil entry exclusive

Also Read | திருமணத்திற்கு முன் கௌதம் & மஞ்சிமா போட்டோ ஷூட்.. வைரலாகும் புகைப்படங்கள்!

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டா ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவர்களுள் மக்களை கவர்ந்த ஜிபி முத்து முதலிலியே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார்.  இந்நிலையில் இதற்கு அடுத்த கட்டமாக அசல் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். அதன்பிறகு அடுத்த வாரத்தில் ஷெரினாவை மலையாளத்தில் எழுதப்பட்ட பெயர் கார்டை காண்பித்து அவர் எலிமினேட் ஆவதாக கமல்ஹாசன் அறிவித்திருந்தார். அதன் பின்னர் மகேஸ்வரி எலிமினேட் ஆனார். இதனிடையே வைல்டு கார்டு எண்ட்ரியாக  மைனா பங்கேற்றுள்ளார். கடந்த வாரத்தில் நிவாஷினி எலிமினேட் ஆகியிருந்தார்.

Vanitha Advise Robert before bigg boss 6 tamil entry exclusive

பிக்பாஸ் ஆரம்பமானது முதலே ராபர்ட் மாஸ்டர் மற்றும் ரச்சிதா ஆகியோரிடையே நடைபெறும் உரையாடல்கள் உள்ளிட்ட விஷயங்கள் அதிக அளவில் கவனம் பெறும். இதனிடையே, சமீபத்தில் ராபர்ட் மாஸ்டர் கிச்சன் ஏரியாவிலேயே சுற்றி வருவதை குறிப்பிட்டு தனலட்சுமி சில கருத்துக்களை பேசி இருந்தார்.

இதனை ரச்சிதாவும் வழிமொழிய ராபர்ட் மாஸ்டர் அப்செட் ஆனதாக தெரிகிறது. இது பற்றி நேரடியாகவே ராபர்ட் மாஸ்டரிடம் பேச முடிவு செய்த ரச்சிதா, "ஏன் இப்படி அப்நார்மலாக நடந்து கொள்கிறீர்கள்?. நார்மலாக இருங்களேன். நீங்க என்ன எவ்வளவு கலாய்க்குறீங்க, பதிலுக்கு நான் ஒன்னும் சொல்ல கூடாதா?. ஏன் இப்படி இருக்கீங்க. நீங்க பண்றது குழந்தைத்தனமா இருக்கு. உங்களுக்கு அது தெரியுதா?. எதோ எதிரி மாதிரி Behave பண்றீங்க. எதிர்ல் இருக்கிறவங்களுக்கு எப்படி இருக்கும்ன்னு தெரியுமா?. நீங்க நார்மலா இருங்க" என சொல்லிவிட்டார்.

Vanitha Advise Robert before bigg boss 6 tamil entry exclusive

இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸில் ஷகிலாவுடனான நேர்காணலில் மனம் திறந்த நடிகையும், முந்தைய சீசன் பிக்பாஸ் போட்டியாளருமான வனிதா, “ராபர்ட் ரச்சிதா விஷயம்.. என்ன நடக்குதுனே எனக்கு புரியவில்லை. என்னதான் நடக்குது. ராபர்ட் உள்ளே செல்லும்போது நான் சொல்லித்தான் அனுப்பினேன். இங்கு சென்றாலே காதல் அது இது என்று வரும்.. அப்படி வந்தால் முதல் ஆளாக இதுவரை பிக் பாஸில் யாரும் பண்ணாத விஷயத்தை நீ செய்..  அவர்களின் நீயாக கூப்பிட்டு, ‘போதும்மா சாமி.. இந்த லவ்வே வேண்டாம்.. இங்கு கேம் விளையாட வந்தோம்.. அந்த வேலையை செய்வோம் என்று சொல்லி அட்வைஸ் பண்ணிவிட்டு நீ நடந்து சென்றால் நீ ஹீரோ’ என்று கூறினேன். அப்போது ராபர்ட் அப்படி எல்லாம் எப்படி நடக்குமா? என்று கூறினான்.

Vanitha Advise Robert before bigg boss 6 tamil entry exclusive

அதற்கு நானும், “நீ பண்ண மாட்டேப்பா .. ஆனால் யாராவது அப்படி பேசினால் கூட நீ இப்படி சொல் என்று கூறி அனுப்பி இருந்தேன். ஆனால் கடைசில இவன் என்ன பண்ணுகிறான் என்பது அவனுக்கே தெரிகிறதா என்பது தெரியவில்லை.” என்றார். அப்போது பேசிய ஷகிலா, “இதுக்கு நடுவுல 22 வயசு பையன் என்கிறார்” என்று எடுத்துச் சொல்ல, “ஆமாம் 22 வயசு பொண்ணு என்கிறார்.. எனக்கு ஒன்றும் புரியவில்லை” என்று வனிதா சிரிக்கிறார். மேலும் வனிதா மற்றும் ஷகிலா உரையாடக்கூடிய பேட்டியின் முழு காணொளி வீடியோவை இணைப்பில் காணலாம்.

Also Read | ஸ்வீட் எடுங்க.. ஆண் குழந்தைக்கு அப்பாவான ‘அஞ்சாதே’ நரேன் 😍

"லவ்வு கிவ்வுனு வரும்.. இத செஞ்சா நீ ராஜானு சொன்னேன்.. ஆனா".. ராபர்ட் குறித்து வனிதா EXCLUSIVE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vanitha Advise Robert before bigg boss 6 tamil entry exclusive

People looking for online information on Bigg Boss 6, Bigg boss 6 tamil, Robert, Shakila, Vanitha will find this news story useful.