www.garudabazaar.com

மாநாடு ரிலீசாகி ஒரு வருடம்.. தயாரிப்பாளர் வெளியிட்ட நெகிழ்ச்சியான அறிக்கை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2021 ஆம் வருடத்தில் மிகப்பெரிய வெற்றி அடைந்த தமிழ் திரைப்படங்களில் ஒன்று மாநாடு.

One year of Maanaadu Producer Suresh Kamatchi Statement

Also Read | ஸ்வீட் எடுங்க.. ஆண் குழந்தைக்கு அப்பாவான ‘அஞ்சாதே’ நரேன் 😍

இந்த 'மாநாடு' படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்க,  V ஹவுஸ் சார்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்தார். Time Loop பாணியில் அமைந்த மாநாடு படம் கடந்தாண்டு 25.11.2021 அன்று உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகியது. ஒரு காலச் சுழற்சியில் சிக்கிக் கொள்ளும் கதாநாயகன் அப்துல் காலிக்கின் வாழ்க்கையே மாநாடு கதை. இந்த படம்  கடந்தாண்டு 2021 டிசம்பர் 24 அன்று முதல் SonyLIV OTT- யில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 117 கோடி ரூபாயை வசூலாக ஈட்டியது.

சென்னை ரோகினி திரையரங்கில் மாநாடு திரைப்படம் 100 நாட்கள் ஓடி சாதனைப் படைத்தது. மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க வில்லனாக முக்கிய வேடத்தில் நடிகர் எஸ்ஜே.சூர்யா நடித்தார். இவர்களுடன் வாகை சந்திரசேகர், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன்,  மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், மஹத் ராகவேந்திரா, படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் இப்படத்தில் நடித்தனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் ஒளிப்பதிவை ரிச்சர்டு எம்.நாதன் கவனிக்க, பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இந்த படத்தின் தெலுங்கு டப்பிங் மற்றும் அனைத்து மொழி ரீமேக் ரைட்ஸையும் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மிகப்பெரிய சாதனை தொகைக்கு கைப்பற்றியுள்ளது.

One year of Maanaadu Producer Suresh Kamatchi Statement

இந்நிலையில் மாநாடு படம் ரிலீசாகி ஒரு வருடம் ஆவதை ஒட்டி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "சின்னதா ஒன்றை ஆரம்பித்தால் தைரியம் கொஞ்சம் கூடவே இருக்கும்.

ஆனா கொஞ்சம் அகலமாகக் கால் பதிக்கும்போது மிகப் பதட்டமும், தைரியக் குறைச்சலும் தானாகவே வந்துவிடும். மாநாடு படத்தைத் தொடங்கியபோது அந்த இரண்டையும் கடந்து அடுத்த கட்டம் அடைந்தேன்.

அதற்குப் பெருந்துணையாக இருந்தது சிம்பு இயக்குநர் வெங்கட் பிரபு SJ சூர்யா. லிட்டில் மேஸ்ட்ரோ யுவன், கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நடித்த அனைத்து நடிகர் நடிகைகள் ஃபைனான்சியர்கள் உத்தம் சந்த் அவர்கள் மற்றும் திருப்பூர் சுப்ரமணியன் அண்ணா, ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன். எடிட்டர் கே.எல்.பிரவீண், கலை இயக்குநர் உமேஷ், சண்டைப் பயிற்சி ஸ்டண்ட் சில்வா, உதவி இயக்குநர்கள்,

One year of Maanaadu Producer Suresh Kamatchi StatementPRODUCTIONS சிலம்பரசனின் ரசிகர்கள், தொழில் நுட்பக்கலைஞர்கள், ஊடக மற்றும் பத்திரிகை. ழில் நுட்பக்கலைஞர்கள். நண்பர்கள், சக தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க அதிபர்கள், அலுவலக ஊழியர்கள், பி ஆர் ஓ என மாநாடு படத்திற்காக உழைத்த அத்தனை பேரும்தான்.

இந்த ஒரு ஆண்டு நிறைவு நாளில் அனைவருக்கும் நிறைந்த மனதுடன் நன்றி கூறிக்கொள்கிறேன்.

என் எல்லா பயணத்திலும் நீங்கள் உடனிருக்கும் நம்பிக்கையில் உழைக்கிறேன். மீண்டும் மீண்டும் நல்ல படங்களைத் தர விளைகிறேன்." என சுரேஷ் காமாட்சி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Also Read | திருமணத்திற்கு முன் கௌதம் & மஞ்சிமா போட்டோ ஷூட்.. வைரலாகும் புகைப்படங்கள்!

தொடர்புடைய இணைப்புகள்

One year of Maanaadu Producer Suresh Kamatchi Statement

People looking for online information on Maanaadu Tamil, One year of Maanaadu, Silambarasan TR, Suresh Kamatchi will find this news story useful.