www.garudabazaar.com

"டயலாக் சொன்ன உடனே பண்ணிடு".. லவ்டுடே படத்தின் BTS வீடியோவை பகிர்ந்த இயக்குனர் பிரதீப்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லவ்டுடே படத்தின் BTS வீடியோவை அப்படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

Love Today Movie BTS video shared by director Pradeep

Also Read | துணிவு படத்தின் பாடல் குறித்து அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர் ஜிப்ரான்..!

கடந்த 2019-ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படம் ‘கோமாளி'. இப்படத்தை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் காஜல் அகர்வால், யோகிபாபு, சம்யுக்தா, கே. எஸ் ரவிக்குமார், பொன்னம்பலம் என பலர் நடித்து இருந்தனர்.  காமெடி டிராமாவாக உருவான இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

Love Today Movie BTS video shared by director Pradeep

இதைத் தொடர்ந்து பிரதீப், லவ் டுடே படத்தை இயக்கி உள்ளார்.  இதில் நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். 'நாச்சியார்' படத்தில் நடித்த இவானா 'லவ் டுடே' படத்தின் நாயகியாகவும், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசை படத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ளது. 'லவ் டுடே' படத்திற்கு தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை வடிவமைப்பை எம்கேடி கையாண்டுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கடந்த நவம்பர் 4, 2022 ஆம் தேதி முதல் வெளியாகி உள்ளது. இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Love Today Movie BTS video shared by director Pradeep

இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் BTS வீடியோவை பகிர்ந்திருக்கிறார். படத்தில் வரும் சிறுவன் ஒருவனுக்கு நடிக்க கற்றுக்கொடுக்கும் பிரதீப், டயலாக் சொன்னதும் கீழே முழங்காலிட்டு நடிக்கும்படி சொல்கிறார். பின்னர் அதுபோல நடித்தும் காட்டுகிறார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

Also Read | நடிகர் மகேஷ்பாபுவின் தந்தை மறைவுக்கு சியான் விக்ரமின் உருக்கமான பதிவு..!

தொடர்புடைய இணைப்புகள்

Love Today Movie BTS video shared by director Pradeep

People looking for online information on Love today, Love Today Movie BTS video, Pradeep Ranganathan will find this news story useful.