பிரபல இளம் நடிகர் அதிரடி... அந்த நடிகரைப் போலவே நானும் செய்யப்போகிறேன்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு தாராள மனதுடன் உதவ முன்வந்த நடிகர் விஜய் ஆண்டனி.அவர் தற்போது “தமிழரசன்” “அக்னி சிறகுகள்” “காக்கி” போன்ற  படங்களில் நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களும் 2020-ல் வெளியாகும் திட்டத்தில் எடுக்கப்பட்டு வந்தன.

பிரபல இளம் நடிகர் அதிரடிஅவரைப் போல நானும் செய்யப்போகிறேன்Popular young actor Harish kalyan follows foot steps of former actor during corona lockdown

புது படங்கள் திரையரங்குகளில் வெளியிட மேலும் மூன்று மாதங்கள் ஆகும் என்ற சூழ்நிலையில், தன்னை நம்பி திரைப்படங்கள் தயாரித்த தயாரிப்பாளர்கள் பாதிக்கபடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில், விஜய் ஆண்டனி தாமாகவே முன்வந்து தனக்கு ஒப்புக்கொள்ளப்பட்ட சம்பளத்தில் 25 சதவீதத்தை குறைத்து கொள்ளுமாறு இந்த மூன்று படங்களின் தயாரிப்பாளர்களுக்கும் சொல்லி விட்டார்.

இந்த சம்பள குறைப்பு மூலம், மூன்று தயாரிப்பாளர்களும் தங்கள் படங்களின் மொத்த பட்ஜெட்டை குறைத்து, வெகு விரைவில் அவர்களின் படங்களை எந்த பிரச்சனைகளும் இல்லாமல் வெளியிட முடியும்' என்று விஜய் ஆண்டனி அதிரடியாக வெளியிட்டார். இதனை அறிந்த இளம் முன்னணி நடிகர் ஹரிஷ் கல்யாண் அவரை பாராட்டி தானும் அவ்வழி நடக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

Entertainment sub editor